கண் விழித்தவுடன் உள்ளங்கையை பார்த்து இதை சொல்லுங்கள்: ஏன் தெரியுமா?

Report Print Printha in ஆன்மீகம்
324Shares

காலையில் கண் விழித்தவுடன் நமது இரண்டு உள்ளங்கைகளையும் உடனே பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள். அதற்கான ஆன்மீக பதில் இதோ,

காலையில் உள்ளங்கையை பார்க்க சொல்வது ஏன்?

இறை உருவத்தின் பெருமையை கைகள் மட்டுமே வெளிப்படுத்தும். எனவே இறை உருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களை கடவுளுக்குச் சமமானதாக வேதங்கள் சொல்கிறது.

உள்ளங்கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்கிறது.

ஹஸ்தரேகா என்ற சாஸ்திரம் கையை வைத்து உருவானது.

எனவே அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெறுவதற்கு காலையில் எழுந்ததும் உள்ளங்கைகளைப் பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

காலையில் எழுந்ததும் உள்ளங்கைகளை பார்த்து,

கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி

கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்

என்ற ஸ்லோகத்தையும் கூற வேண்டும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்