சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா?

Report Print Printha in ஆன்மீகம்

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவற்றை பொறுத்து பல்வேறு பலன்கள் உண்டு.

அவை ஸ்தான பலம், சம்யோக பலம் மற்றும் திருஷ்டி பலம் போன்றவை ஆகும்.

சனிபகவானை நேருக்கு நேராக வழிபடலாமா?

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, இராகு, கேது போன்ற நவக்கிரகங்களில் ஒன்றான சனிப்பகவானின் பார்வை மற்றும் சக்தியை நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

நவக்கிரகங்களில் அசுப கிரகமான சனிக்கிரகத்தின் பார்வை 3, 7, 10-ம் இடங்களில் அசுப பலனையே ஏற்படுத்தும்.

ஆகவே கோவில்களில் சனீஸ்வரன் சன்னதியில் மட்டும் நேருக்கு நேர் நின்றோ அல்லது அமர்ந்தோ சனிப்பகவானை வழிபடக் கூடாது.

ஆனால் சனிபகவான் உள்ள கோவில் சன்னதிகளின் இரண்டு பக்கங்களில் நின்று வழிபடலாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers