ருத்ராட்சம் அணிவதன் பலன்கள்

Report Print Meenakshi in ஆன்மீகம்

மலை பிரதேசங்களில் வளரும் ஒரு வகையான மரத்தின் விதையிலிருந்து பெறப்படுவது தான் ருத்ராட்சம். மருத்துவ பலன்களும் ஆன்மீக பலன்களும் நிறைந்த ருத்ராட்சம் அணிவதால் நமக்கு பல நன்மைகள் கிட்டும்.

ருத்ராட்சத்தில் ஒரு முக ருத்ராட்சம் முதல் 21 முக ருத்ராட்சம் வரை பல வகைகள் உள்ளது. அனைவரும் ஐந்து முக ருத்ராட்சமாவது கட்டாயமாக எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.

ருத்ராட்சத்தின் மேற்பகுதியில் காணப்படும் கோடுகளின் எண்ணிக்கையினை வைத்தே அதன் முகமானது குறிப்பிடப்படுகிறது.

ருத்ராட்சத்தின் வகை

ஒரு முகம் கொண்ட ஏகமுகி ருத்ராட்சம் மிகவும் ஆற்றல் உடையது. எனவே இதனை தகுந்த வழிகாட்டுதல் இன்றி அணியக்கூடாது.

இருமுகம் கொண்ட துவிமுகி ருத்ராட்சமானது பொருள்வளத்தினை தரும்.

ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சமானது உடலுக்கு ஆரோக்கியத்தினையும் ஆற்றலினை தரவல்லது. இதனை ஆண், பெண் பேதமின்றி அனைவரும் அணியலாம்.

ஆறுமுகம் கொண்ட ருத்ராட்சமானது சண்முகி ருத்ராட்சம் என அழைக்கப்படுகிறது. இதனை 14 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகள் அணிவதன் மூலமாக தாயின் பூரண பாசத்தினை பெறலாம்.

மேலும், உடல்நலம் குன்றியோர், மனநலம் குன்றியோர், சர்க்கரை நோய், இதயநோய் உடையவர்கள் அணியும் போது உடல்நலன் படிபடியாக சீராகும்.

பின்பற்ற வேண்டியவை

ருத்ராட்சம் யார் வேண்டுமானாலும் அணியலாம். இதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், அணிந்த ருத்ராட்சத்தினை எப்போது கழற்றக்கூடாது. இதனால் பாவம் வந்து சேரும்.

ருத்ராட்சத்தினை எப்போது அணிந்தே இருக்கலாம். திதி போன்ற இயற்கை நிகழ்வுகளினால் இதனை கழற்ற வேண்டிய அவசியம் இல்லை.

இறைச்சி, மது போன்ற பழக்கத்தினை மட்டும் கைவிடுதல் அவசியமாகும். ருத்ராட்சத்தினை தனியாக அணியக்கூடாது. எனவே ஏதேனும் உலோகத்துடன் சேர்த்து அணிதல் அவசியமாகும்.

பலன்கள்

  • ருத்ராட்சம் அணிவதால் மனநிம்மதி கிடைக்கும். உடல்நலம் சீராகும்.
  • சிறுவர், சிறுமியர் அணிவதால் அவர்களின் படிப்பு திறனானது பளிச்சிடும்.
  • பெண்கள் ருத்ராட்சம் அணிவதால் தீர்க்க சுமங்கலியாக இருப்பர். அவர்களின் கணவர்களுக்கு தொழிலில் நல்ல லாபமும், வெற்றியும் கிட்டும்.
  • ருத்ராட்சம் அணிவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...