கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க தவறாமல் இதை செய்யுங்கள்!

Report Print Printha in ஆன்மீகம்

திருமண பந்தத்தில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது மிகவும் இயல்பு.

ஆனால் அந்த கருத்து வேறுபாடுகள் தீவிரம் அடைந்தால், ஒற்றுமையாக இருக்கும் தம்பதிகளிடையே பலவித பிரச்சனைகள் எழுந்து, நிரந்தரமான பிரிவு நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

எனவே தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல், என்றும் ஒற்றுமையாக இருப்பதற்கு, தவிர்க்காமல் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

கணவன்- மனைவி ஒற்றுமைக்கு செய்ய வேண்டிய பரிகாரம்
  • வெள்ளிக் கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டை வைத்து அதில் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
  • இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு வெள்ளிக் கிழமை அன்று காலை இராகு காலத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளி பூ சாற்றி அபிஷேகம் செய்து நெய்தீபம் ஏற்றி தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.
  • பிரிந்து இருக்கும் தம்பதிகள் கூட இந்த பரிகாரங்களை 5, 7, 9, 11 ஆகிய வாரங்களில் செய்து வந்தால், விரைவில் பலன் கிடைக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments