நவகிரக ஸ்தலங்கள் எங்கு உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

Report Print Aravinth in ஆன்மீகம்

நம் ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி அவரவர் ஜாதகத்தில் கிரகநிலை அமைந்திருக்கும்.

யாருக்குமே ஜாதகத்தில் நவகிரகங்கள் எல்லாமே சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை.

சில கிரகங்கள் பலமாகவும், சில கிரகங்கள் பலவீனமாகவும் அமைந்திருக்கும்.

பலம் பெற்ற கிரகங்களும், ஆதிபத்திய விசேஷமுள்ள கிரகங்களும், சுபர் சாரம் (நட்சத்திரம்) பெற்ற கிரகங்களும் ஜாதகருக்கு விசேஷமான நற்பலன்களைத் தரும் என்பதில் ஐயமில்லை.

கிரகங்கள் பலம் பெறாமல் அமைந்திருக்கும் நிலையில், இன்னல்களும் ஏற்படுவது உண்டு.

அப்படியான இன்னல்களைக் குறைத்துக் கொள்ளவே பரிகாரங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவகிரகங்களும் வலுப் பெற்றிருந்தால், வலுப்பெற்ற கிரகத்தின் தசை, புக்தி, அந்தரம், சூட்சும அந்தரம் ஆகிய காலங்களில் சுப பலன்கள் நிச்சயமாக நடக்கும்.

அதாவது குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிபத்திய விசேஷப்படியும் அவரது காரகத்துவப் படியும் நல்ல பலன்கள் உண்டாகும்.

இதற்கு அந்த அந்த கிரக ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் மிகுந்த நன்மை உண்டாகும்..

நவகிரக ஸ்தலங்கள் எங்கு உள்ளன?

  1. சூரியன்-சூரியனார்கோயில்
  2. சந்திரன்-திங்களூர்
  3. செவ்வாய்-வைத்தீஸ்வரன் கோயில்
  4. புதன்-திருவெண்காடு
  5. வியாழன்-ஆலங்குடி
  6. சுக்கிரன்-கஞ்சனூர்
  7. சனி-திருநள்ளார்
  8. ராகு-திருநாகேஸ்வரம்
  9. கேது-கீழ்ப்பெரும்பள்ளம்

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments