பில்லி, சூனியத்தில் இருந்து விடுபட மந்திரம் இதோ

Report Print Deepthi Deepthi in ஆன்மீகம்

பில்லி சூன்யம் எல்லாம் வெறும் நம்பிக்கை சார்ந்தது. அது கெட்டது செய்யும் என்று நம்பினால் நிச்சியம் கெட்டது செய்யும்.

இந்த விளைவை செய்வது வெளியே இருக்கின்ற நபரோ, திருஷ்டி பொருளோ அல்ல. உள்ளிருக்கும் எண்ணம். . பலவீனமான எண்ணம்.

உளவியலில் parapsychology என்று ஒரு பிரிவு உள்ளது. இது மாந்தரீகம், ஏவல், பில்லி சூன்யம், ஆகியவற்றை ஆராய்வது.

அந்த உளவியல்படி, மேற்கூறியவை black magic வகைக்கு உட்பட்டது. சூன்யம் எல்லாம் நடக்குமா என்றால் ஒரு விதத்தில் நடக்கும். எப்படி?

சூன்யம் என்பது ஒருவர் எண்ணத்தைத் தமது கட்டுப்பாடுக்குள் வரவைப்பது. ஹிப்னாடிசம்(hypnotism) கேள்வி பட்டிருப்பீர்கள். தமது எண்ண வோட்டத்துக்கு ஏற்ப ஆட்டிப் படைக்கும் மனக்கலை ஆகும்.

இங்கே, ஆட்டிவைப்பவன் மனம் வலிமையாக இருக்க வேண்டும். ஆட்டிவைக்கப் படுபவன் மன பலவீனம் கொண்டவனாக இருக்க வேண்டும். அதாவது, தம்மை முழுவதும் அர்பணித்து விட வேண்டும். சரணாகதி ஆக வேண்டும். அப்படி நடந்தால் தான் ஹிப்னாடிசமே ஈடேறும். மனோசக்தி கொண்டவனை ஒருபோதும் ஹிப்னாடிசம் செய்ய முடியாது.

இப்படி அறிவியல் ரீதியான காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், இன்றைய காலம் வரை மக்களின் மத்தியில் பில்லி, சூனியம் என்ற ஒன்று மறையவியில்லை.

படித்தமேதாவிகளாக இருந்தாலும், பில்லி சூனியத்தை நம்பத்தான் செய்கிறார்கள்.

அப்படி பில்லி சூனியத்தில் நீங்கள் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அதிலிருந்து மீள உங்களுக்கான மந்திரம் இதோ,

ஓம் நமோ நாராயாண இறங்கு இறங்கு
செம்பொன்னுடுத்தி செம்பொன்னால் குடையிட்டு வருகிற
கால கால சர்வ பூத பிரேதப் பிசாசு சர்வ அற்ப பிசாசு
சர்வ விடுவையும் சர்வ பில்லியும் சர்வ சூன்யமும்
உன்னடி கண்டு உன்னடி வணங்கினாப் போலோ
என்னடி கண்டு என்னடி வணங்கச் சிவாகா,

மந்திரம் முற்றும் உரு 1008 செபிக்க சித்தியாகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments