நிலத்தின் அடியில் பீறிட்டு வந்த ரத்தம்! மன்னிப்பு கேட்ட ஊர்மக்கள்

Report Print Printha in ஆன்மீகம்
316Shares

விழுப்புரம் மாவட்டம் தும்பூர் தாங்கல் என்னும் திருத்தலத்தில் உள்ள நாகம்மன் திருக்கோவில், தொன்மையான வரலாறுகள் மற்றும் சிறப்பான பெருமையும் கொண்டதாக உள்ளது.

தும்பூர் தாங்கல் நாகம்மன் ஒரே வயிற்றில் பிறந்து, ஒரே ரத்தத்தைச் சேர்ந்த பங்காளியை ஏமாற்றியவனுக்கு கடுமையான தண்டனை கொடுத்து, தீர்ப்பு வழங்கியவள் என்று பெயர் கொண்டவளாக திகழ்கிறாள்.

சிமெண்டு கூரையின் கீழ் அருள் வழங்கி வந்த நாகம்மனின் சிலையை தோண்டி எடுத்து உயரமான பீடத்தில் வைத்து புதிய ஆலயம் எழுப்ப அடியார் முயன்றுள்ளார்கள்.

அப்போது பூமியை தோண்டி ஆழம் அதிகமாக வரும் போது, அந்த கல்நாகம் பருத்த உடலுடன் முழு வடிவமாக பூமியின் கீழே நீண்டு கொண்டே போனதுடன், அந்த நாகர் உருவத்தைச் சுற்றி ஏராளமான நீர் சுரந்து கொண்டு வெள்ளமாக காணப்பட்டது.

இதனால் அந்த பக்தர்கள், நாகர் சிலை அமைந்த இடத்தை இன்னும் தோண்டுவது அம்மனின் சக்தியை சோதிப்பதற்கு சமமாகும் என்பதால், பக்தர்கள் தோண்டிய பகுதிகளை மீண்டும் மண்ணால் மூடிவிட்டு மீதமுள்ள இடத்தில் உயர்ந்த ஆலயம் கட்டி, குடமுழுக்கு விழாவை நடத்தினார்கள்.

தும்பூர் தாங்கலின் அமைந்த நாகம்மன் கோவிலின் சிறப்புகள்

புதிதாக கட்டப்பட்ட நாகம்மாள் சிலைக்கும் வலது புறம் விநாயகர் சன்னிதியும், இடதுபுறம் வள்ளி தெய்வானை ஆறுமுகர் சன்னிதியும், அதன் அருகே உள்ள அரசமரத்தை அடுத்து அன்னை நாகம்மன் உருவம் மேற்கு முகமாய் மெய்சிலிர்க்கும் வண்ணம் காட்சி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நாகம்மன் ஆலயத்தின் வடமேற்கில் அமைந்துள்ள இயற்கையான நாகப்புற்றில், ராகு- கேது தோஷங்கள், காள சர்ப்ப தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களுக்கும், பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது.

தும்பூர் தாங்கல் திருத்தலத்தில் வெளியே காட்சி தரும் நாகத்தின் வால் பகுதி, முத்தாம்பிகையின் திருமேனியில் இன்றும் காணப்படுகிறது. இந்த சிறப்பை நாகம்மன் கோவிலின் அபிஷேக காலங்களில் மட்டுமே காண முடிகிறது.

தும்பூரில் தாங்கல் நாகம்மனின் தலைப்பகுதி ஆலயமாக விளங்குவது போல, அதனுடைய நடுப்பகுதி ஆலயத்தின் பின்புறம் சுமார் 300 அடி தூரத்தில் தெற்கே பூமிக்கு வெளியே காணப்படுகிறது.

மேலும் இந்த நாகம்மன் சிலை மண்வெட்டியால் வெட்டப்பட்டது போல காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments