சிவனின் மயானப்பயணம்

Report Print Abhimanyu in ஆன்மீகம்

சுடுகாடு-எப்படியோ மனிதன் என்றோ ஒரு நாள் போக போகின்ற இடம் தான் இருந்தும் அதனை எவ்வாறான விதத்தில் சந்திக்கபோகின்றான் என்பதில் தான் சுவாரசியம் ஆனால் மனிதன் தனது வாழ்வின் தீவிரத்தை எதிர்நோக்கும் முக்கியமான இடம் இது மட்டுமே.

சிலநேரங்களில் சுடுகாடு இருக்கும் பாதையில் கூட நாம் செல்லதயங்குவதுண்டு.ஆனால் சிவனின் சில புராணங்கள் அவன் சுடுகாட்டில் இருப்பதை போன்று தான் காணப்படுகின்றது.அது ஏன் என நாம் சிலநேரங்களில் சிந்தித்துண்டா?

மனிதர்களின் வாழ்வில் மரணம் நிகழக்கூடிய அந்த கணம் அந்த நொடி மட்டுமே மனிதன் தீவிரமான சந்தர்பத்தை சந்திக்கின்றான். இதன்பொருட்டுதான் சிவனும் மயானத்தில் சென்று அமர்ந்தான்.மயானத்தை ‘காயந்த்த’ என்றும் அழைப்பர்.‘காயா’ என்றால் உடல் ‘அந்த்த’ என்றால் முடிவு அதாவது உடல்முடியும் இடமே தவிர அது உயிர்முடியும் இடம் அல்ல.

இதுவே இறுதி இந்த மண்ணில் இருந்து எடுத்த அனைத்தையும் இவ்விடத்திலேயே விட்டுவிட வேண்டும்.வாழ்பவர்களின் மத்தியில் இருப்பது நேர விரயம் என்றுணர்ந்த சிவன், இறந்தவர்களின் உடல் இருக்கும் இடத்திற்கு சென்றான்.

சிவன் அழிக்கும் சக்தியை கொண்டவர். அதனால் அவர் மரணம் மீது அவாகொண்டவர் எனவும் கூறமுடியாது.மயானத்தில் அவர் உங்கள் ‘உடல்’ அழிவதற்காகக் காத்திருக்கின்றார். காரணம், ஒருவரின் உடல் அழியும் வரை, அவரின் சுற்றத்தாருக்கும் கூட மரணம் என்றால் என்ன என்பது தெளிவாக புரிவதில்லை.

நம்மில் ஒருவர் இறந்துவிட்டால், அப்போது புரியும் அந்த துன்பமும் வலியும் ஆனால் அதே நேரம் உடலிற்கு நெருப்பு வைத்துவிட்டால், அதனருகில் யாரும் செல்லமாட்டர்.

எது நமக்கு முறையாக புரியவில்லையோ, அது தான் நமக்கு பயத்தைக் கொடுக்கும் தரகூடியதாக அமையும். பயத்தின் கட்டுப்பட்டால், பாதியோ, அல்லது அதற்கும் குறைவான வாழ்க்கை தான் மனிதர்களால் வாழமுடியும். பாதி வாழ்க்கை வாழ்வதில் என்ன பயன் தான் உள்ளது? இதன் பொருட்டு தான் வாழ்வையும் அதன் முழு தீவிரத்தையும் உணர எண்ணிய சிவன், நாடகங்கள் ஏதும் நிகழா ‘உண்மை’ விளக்கும் இடமான மயானத்தில் அமர்ந்துள்ளார்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments