தேவாரம் பாடி அசத்திய வெள்ளைக்கார பெண்!

Report Print Fathima Fathima in ஆன்மீகம்

லண்டன் சிவன் கோவிலில் ஒன்றில் வெள்ளைக்கார பெண் ஒருவர் தேவாரம் பாடிய ஒளிப்பதிவு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது.

என்னதான் காலங்கள் கடந்து போயினும் கடவுள் மீதான பக்தி கடல் கடந்து சென்றாலும் அதிகமாக பரவி வருவதனை காணக்கூடியதாக உள்ளது.

தற்போதைய காலத்தில் சைவ சமயத்தில் உள்ளவர்களே தேவாரம் தெரியாமல், சரியான முறையில் கடவுளை வழிபடுவதற்கு கூடத் தெரியாமல் இருக்கும் நிலையை தற்போது நாம் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நிலையில் வெள்ளைக்கார பெண் ஒருவர் தேவாரம் பாடியுள்ளமை சைவசமயத்தின் தொண்மையையும் பெருமையையும் மீள் வலுப்படுத்துவதாக உள்ளது.

ஏற்கனவே நல்லூர் கந்தன் ஆலயத்தில் வெள்ளைக்கார பெண்கள் தமிழ் கலாச்சார உடைகளில் வலம் வந்தது, அவர்கள் இந்துக் கடவுள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமது கலாச்சாரங்களுக்கு மாறுபட்ட முறையில் வழிபாடுகளையும் தொடர்ந்திருந்தமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்துக்களின் சமய சடங்குகளின் முக்கியத்துவம் ஐரோப்பிய மக்களிடையே வேகமாக பரவி வருகின்றமைக்கு இது சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.

இவ்வாறான ஒரு காரியம் சைவ சமயம் இன்னும் அழிந்து போகவில்லை என்று கூறுவதுடன் சைவ சமயத்தவரின் பெருமையினையும் இங்கு பறைசாற்றுகின்றது.

இதேவேளை உள்நாட்டில் இந்து மதக் கலாச்சாரங்கள் அழிக்கப்பட்டு வரும் வேளையில் வெளிநாடுகளில் அவை வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments