இன்று உலக அகதி நாள்... ஈழத் தமிழர்களுக்கான சவால்!

Report Print Fathima Fathima in சிறப்பு

உலக அகதி நாள் (World Refugee Day) ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது.

2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆப்பிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதனால், இந்நாள் உலக அகதிகள் நாளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.

பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாக கருத்தப்படுகிறது.

அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும், பல்வேறு போர்களால், அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும்.

அந்தவகையில் தற்போது இதுகுறித்து மேலதிகமான தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்