காதலின் சின்னமான தாஜ்மஹால் பற்றிய பல உண்மைகள்... வீடியோவுடன் இதோ!

Report Print Kavitha in சிறப்பு
306Shares

இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாக ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹால் விளங்குகின்றது.

ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் முழுவதும் பளிங்குக் கற்களை கொண்டு இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்று விளங்குகின்றது.

சர்வதேசளவில் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் அற்புதங்களில் ஒன்றாகவும் இது தலை சிறந்து இருக்கிறது.

ஷாஜகானின் மூன்றாவது மனைவியான (அர்ஜுமந்த் பானு பேகம்) மும்தாஜ் 14 வது குழந்தையை பெற்றெடுக்கும் போது, உடல்நலை சரியில்லாமல் இறந்து போனார்.

இதன் காரணமாக முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டதாக வரலாற்றுப்ப பதிவுகள் கூறுகின்றன.

இஸ்லாம், பாரசீகம் மற்றும் இந்திய கட்டிடக்கலைகளின் கலவையில் உருவான தாஜ்மஹால், தொடர்ந்து 22 ஆண்டுகள் கட்டப்பட்டது. அதில் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றினர் என்பது வரலாறு கூறுகின்றது.

1000 யானைகளை வைத்து தாஜ்மஹால் கட்டப்பட்டது. பல்வேறு இடங்களில் இருந்து வந்த பளிங்கு கற்களை ஏந்திக் கொண்டு, யமுனை ஆற்றங்கரையில் இறக்குவது தான் யானைகளில் பிரதான பணியாக இருந்தது இதனை செயற்படுத்தியது.

பளிங்கு கற்களை வைத்து தாஜ்மஹால் கட்டப்பட்டாலும், அலங்கார வடிவமைப்பிற்காக விலைமதிப்பற்ற கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

காலை, நன்பகல், யாமம், நிலவொளி வீசும் இரவு என எந்த காலநிலையிலும் தாஜ்மஹால் பல வண்ணங்களில் மிண்ணும் என்பது குறிப்பிடத்தக்கது.

தாஜ்மஹாலின் உள்ளுக்குள் சென்று பார்த்தால், இஸ்லாம் மக்களின் புனித நூலான குரானின் வசனங்கள் பல இடங்களில் எழுதப்பட்டிருப்பதை பார்க்க முடியும்.

தாஜ்மஹாலுக்கு மும்தாஜ் மெஹல் என்றும் ஒரு பெயர் உள்ளது. இங்குள்ள மும்தாஜ் கல்லறையில் அல்லாஹ்வின் 99 பெயர்கள் சித்திரக் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹால்லை கட்டுவதற்கான கட்டிட பொருட்கள் பஞ்சாப், ராஜஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, சீனா, திபெத், அரேபியா என பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டன.

மேலும் தாஜ் மஹால் பற்றி பல சுவாராஸ்ய தகவலை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்