லண்டனில் அசத்திய அனுராதா ஸ்ரீராம்

Report Print Dias Dias in சிறப்பு

லண்டன் எல்ஸ்ரி (London elstree) ஹெலிடேசின் (holdainny)நான்கு நட்சத்திர விடுதியின் மாநாட்டு அரங்கில் சுபராவின் சுபமான ராகங்கள் கடந்த சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

சுபரா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், இசை ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

லண்டனில் பிறந்து வளர்ந்த துஷி-தனு சகோதரிகளின் இசைக்குழுவின் பின்னணி இசையில் பிரபல தென்னிந்திய திரைப்பட முன்னணி பாடகி டொக்டர்.அனுராதா ஸ்ரீராம் சிறப்பு பாடகியாக கலந்துக்கொண்டு பல இனிமையான பாடல்களை பாடினார்.

இசை நிகழ்ச்சியின் இறுதிவரை அமைதியாய் இருந்து ரசித்த இரசிகர் கூட்டமே நிகழ்வின் சிறப்புக்கு சான்றாக அமைந்தது.

எஸ்.கே குணாவின் நிகழ்ச்சித் தொகுப்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் அனுராதா பாடல்களுக்கிடையில் கருத்து பகிர்ந்து இசை நிகழ்ச்சியை நகர்த்தி சென்றமை அலாதியானது.

இரசிகர்களை சிரிக்கவும்,சிந்திக்கவும்,வைத்த ஸ்ரீமதி, அனுராதா ஸ்ரீராம் புலம்பெயர் தமிழர்களின் விருந்தோம்பல் பற்றி தெளிவுடன் பகிர்ந்த கருத்துக்கள் ஊடக பரப்பிலும் ,புலம் பெயர் ஈழ தமிழர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சுபராவின் தலைவர் சுதாகர் மகாலிங்கம்,தனது உரையில் கூறியது போல் பெருமையில்லாத பெரு மனிதர் என்பதை பாடகி அனுராதா ஸ்ரீராம் நிறுவியுள்ளார்.

பல மொழிகளில் 5000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள அனுராதா ஸ்ரீராம் அவர்களுக்கு சுபரா சிறப்பானதோர் கௌரவத்தை வழங்கியுள்ளதை ரசிகர்கள் பாராட்டிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்