மண்ணை பிளந்து வெளிவந்த சிலை! 2004ஆம் ஆண்டு சுனாமிக்கு இது தான் காரணமா?

Report Print Kavitha in சிறப்பு

ஆசியாவின் மிக உயரமான சிவலிங்கம் என கருதப்படுவது அருணாச்சல பிரதேசத்தின் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் சித்த லிங்கேஸ்வரர் லிங்கம் தான்.

அருணாச்சல பிரதேச மாநிலம் ஜிரோ பகுதியில் அமைந்துள்ள கார்டோ எனும் காட்டுக்குள் அமைந்திருக்கும் இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்தாக கருதப்படுகின்றது.

இந்த லிங்கம் 25 அடி உயரம் 22 அடி அகலமும் கொண்டது.

ஜிரோவின் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் இந்த கோவில் மற்ற இந்தியா கோவில்களைப் போல அழகிய கட்டுமானங்கள் கொண்டு கட்டப்படவில்லை.

ஏனெனில் 2004ம் ஆண்டு இங்குள்ள சிவலிங்கம் பூமியிலிருந்து பிளந்து வந்த சிலையைப் போல காணப்படுகிறது.

இதைச் சுற்றிலும் நிறைய சூலங்கள் வைக்கப்பட்டு குங்குமம், சந்தனம், மஞ்சள் ஆகியவை கலந்து இந்த சிலை மிகவும் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது.

அதுமட்டுமின்றி இது சாதாரண கோவிலைப் போல இல்லாமல் மண்ணை பிளந்து வெளிவந்த சிலையைப் போல இருப்பதாலும், இது மிக பிரபலமாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆலயத்திற்கு வெளிநாட்டிலிருந்து அதிக அளவில் மக்கள் வருகை தந்து வழிப்பட்டு செல்கின்றார்கள்.

மேலும் இந்த சிலை 2004ம் ஆண்டு வெளிவர தொடங்கியதால் அந்த ஆண்டில் சுனாமி உள்ளிட்ட பல இயற்கை சீற்றங்கள் வந்ததாகவும் அதே சமயத்தில் இந்தியா உட்பட பல பிரதேசங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டது என்று கூறப்படுகிறது.

2014 ஆம் ஆண்டின் சுனாமிக்கு காரணம் இந்த சிலை என்று சிலரால் சொல்லப்படுகின்றது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்