நிர்வாணமாக பூசை நடத்தும் பெண்கள்; இரவில் நடக்கும் அமானுஷ்யங்கள்.. மரணபயத்தில் மக்கள்

Report Print Kavitha in சிறப்பு

கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் பெண்கள் நிர்வாணமாக அம்மனுக்கு பூசை செய்வது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள சித்தாப்பூர் என்று அழைக்கப்படும் பகுதியில் பல கிராமங்கள் அருகருகே அமைந்து இந்த கோவிலின் அமைவிடமாக இருக்கிறது.

இக்கோவில் குகைக் கோவில் வகையைச் சேர்ந்தது ஆகும், ரேணுகாம்பா தேவி கோவில் அல்லது ரேணுகாம்பா கோவில் என்று இந்த கோவில் அழைக்கப்படுகிறது.

இங்கு ரேணுகாம்பா தேவியின் கோயிலில் ரேணுகாம்பா ஜாட்ரா என்ற விநோத நிகழ்வு பலரும் அதிசயிக்கும் வண்ணம் விசித்திரமான வகையில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இக்கோயிலில் விழாவில் பெண்கள் நிர்வாணமாக பூசை நடத்துவார்கள் என்றும், இந்த சமயங்களில் கோவில் விழா களைகட்டும் என்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி இங்கு உள்ளூர்காரர்களைத் தவிர்த்து மற்றவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டால், நிச்சயம் அவர்களுக்கு மரண பயத்தை பார்த்துவிட்டு வர நேரிடும் என்று சொல்லப்படுகின்றது.

இரவு நேரங்களில் நடக்கும் இந்த விசித்திரமான பூசைகளில் வெளி ஊர் காரர்கள் கலந்துகொள்ள அவ்வளவாக அனுமதிக்கப்படுவதில்லை இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

சில சமயங்களில் இங்கு நடப்பவை அவர்களின் கற்பனைக்கு அப்பால் இருப்பதாலேயே மயங்கிய நிலைக்கு செல்கிறார்கள். அது இன்னும் விசித்திரமானதாகவே இருக்கிறது என்று மக்கள் கூறுகின்றனர்.

அத்துடன் வருடம் ஒரு முறை கொண்டாடப்படும் திருவிழாவின் போதும் பல ஆச்சர்ய நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

1984 வரை நிகழ்த்தப்பட்டு வந்த சடங்கு முறை ஒன்றில் பெண்கள் அங்குள்ள குளத்தில் பிறந்தமேனிக்கு குளித்துவிட்டு அப்படியே பூசையில் கலந்து கொள்ளவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

பண்பாட்டை காக்கவேண்டும் என்று கூறியும் பல வருடங்களாக இதைத் தொடர்ந்து வருகின்றனர். தற்போதும் சில சமயங்களில் இது மாதிரியான விநோத வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த ஆண்டு வரை அது மிகக் கட்டுப்பாடோடு நடத்தப்பட்டது. நிச்சயம் பெண்கள் அதில் கலந்துகொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. அங்கு வாழ்ந்தவர்கள் தங்கள் நிர்வாண வழிபாடு நிகழ்த்தாமல் இந்த திருவிழா முழுமை பெறாது என்றும் கூறுகின்றனர்.

நிர்வாண ஜாத்ரா என்று அழைக்கப்படும் இந்த விநோத வழிபாட்டில் பெண்களே அதிக அளவில் கலந்துகொள்கிறார்கள்.

உடைகளின்றி வெற்றுடலில் ரேணுகாம்பாவை தரிசித்தால், ஊரில் மழை ஊத்தி எடுக்கும் என்பது ஜதீகமாகும்.

கிட்டத்தட்ட எல்லா வருடங்களுமே இந்த மழை வருகிறது என்கிறார்கள் அந்த ஊர் பக்தர்கள்.

இந்த கோவில் விழாவில் நிர்வாண வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது அவ்வப்போது நடந்துதான் வருகிறது என்கிறார்கள் இதை எதிர்ப்பவர்கள்.

ஆதி காலத்தில் மனிதன் இலை தழைகளுடன் வாழ்ந்தபோது இந்த விநோத வழிபாட்டை கடைபிடித்தான் என்பதற்காக இப்போது இதே முறையை கொண்டாடுவது சிறந்ததல்ல என்கிறார்கள் எதிர்த்தரப்பினர்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்