யுராசிக் காலப்பகுதியில் வாழ்ந்த மீன் இனம் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in சிறப்பு

பிரன்ஹா போன்ற யுராசிக் காலப்பகுதிக்குரிய மீனின் புதைபடிவங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 150 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாகக் கருதப்படும் இம் மீனினம் தற்போதைய பிரன்ஹா மீன்களினது பற்களிலும் வேறுபட்ட கூர்மையான பற்களைக் கொண்ட என்பு மீனினம் ஆகும்.

இப் பற்கள் மற்றைய மீன்களின் செட்டைகள், தசைகளைத் துண்ணடாக்கிக் கிழிக்க இவற்றுக்கு உதவியாகவிருந்தன.

தென் ஜேர்மனியில் கண்டெடுக்கப்பட்டுள்ள இவ் எச்சங்களின் அருகில் வேறு மீனினங்களின் எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

இம் மீன்கள் செட்டைகளை இழந்த நிலையில் வெறும் உடல் துண்டங்களாக காணப்பட்டிருந்தன.

இவை ஆதி காலத்துக்குரிய பிரன்ஹா மீன்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

அக்கால பிரன்ஹா மீன்கள் பிற மீன்களின் செட்டைகளையே பிரதான உணவுப் பழக்கமாகக் கொண்டிருந்தமை விஞ்ஞானிகளை ஆச்சரியப்படவைத்துள்ளது.

தற்போது பிரன்ஹா மீன்கள் தென் அமெரிக்காவின் நன்னீர் நீர் நிலைகளில் மட்டுமே காணப்படுகின்றன.

இவற்றில் சில 20 இனங்கள் அமேசன் பகுதிகளில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் கண்டெடுக்கப்பட்ட ஆதிகால பிரான்ஹாவின் எச்சங்கள் இருந்த இடமானது முன்னொருகாலத்தில் கடல் பகுதியாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகின் ஏனைய சில பாகங்களிலும் பிரான்ஹா மீனினங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அவை நீர்வழிகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு மீன்களாகவே காணப்படுகின்றன.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்