பண்டையக் காலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட கொடூரமான தண்டனைகள்!

Report Print Kavitha in சிறப்பு

இன்றைய உலகில் தவறு செய்யாதவர் எவரும் இல்லை என்று தான் கூற முடியும்.

அக்காலத்தில் ஆண்- பெண் இரு பாலரும் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டது இதிலும் சில குற்றங்களுக்கு பெண்களுக்கு மட்டுமே கொடுமையாகவும் கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 10 - 16ம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டங்களில் இத்தகைய தண்டனைகள் உலகின் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்பட்டு வந்துள்ளன.

புரளி பேசுதல், பாலியல் தொழில் செய்வது, சூனியம், திருட்டு, தவறான உறவு வைத்துக் கொள்தல் என சிறிய அளவிலான குற்றங்களில் இருந்து பெரிய அளவிலான குற்றங்கள் வரை பெண்களுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் 99% தண்டனைகள், பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், அவர்களை நிர்வாணப்படுத்தி கொடுக்கப்பட்ட தண்டனைகளுமாகவே இருந்துள்ளன.

இவற்றில் சில பெண்களுக்கு வழங்கப்படும் கொடூரமான தண்டனைகளை பார்ப்போம்.

புரளி, கிசுகிசு பேசும் பெண்களுக்கு

புரளி, கிசுகிசு அல்லது எதிர்த்து பேசும் பெண்களுக்கு வாயை பூட்டும் வகையிலான முகத்தை சுற்றிய பூட்டு போடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சண்டையிட்டுக் கொள்ளும் பெண்களுக்கு

சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனை இது. இரண்டு பெண்களைShrew's Fiddle எனும் பூட்டும் வகையிலான பலகையில் சேர்ந்து கட்டிவிடுவார்கள்.

தகாத உறவில் இருக்கும் பெண்களுக்கு

தகாத உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவருக்கும் தரப்பட்டு வந்தாலும், அதிகம் இந்த தண்டனை பெற்றவர்கள் பெண்கள் தான் என்று அறியப்படுகிறது. cucking stool எனும் இந்த நாற்காலியில் உட்கார செய்து அவமானப்படுத்துவார்கள்.

Cucking Stoolன் அடுத்த கட்டம் தான் இந்த Ducking Stool. இதை சக்கரங்கள் கொண்ட உயரமான தூண்டில் போன்ற கருவி கொண்ட வண்டியில் கட்டி ஆறு ஓடும் பாதையின் வழியே அந்தரத்தில் தொங்கவிடுவார்கள்.

Cucking stool எனும் நாற்காலி மிகவும் சூடாக இருக்கும் என்று அறியப்படுகிறது. இந்த தண்டனை பெற்ற பெண்கள் சிலர், தண்டனை அனுபவிக்கும் போதே இறந்துள்ளனர் என்றும் சில தகவல்களில் கூறப்பட்டுள்ளன.

அக்கம் பக்கத்தினரை பேசியே டார்ச்சர் செய்யும் அல்லது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருக்கும் பெண்களுக்கு இந்த தண்டனை. கை, கால்களை கட்டி.. கழுத்தை துண்டித்துவிடுவார்கள்.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருந்த பெண்கள் மற்றும் திருட்டு செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு இந்த Drunkard's Cloak எனும் தண்டனை தரப்பட்டுள்ளது. ஊர் மக்கள் முன்னிலையில் கழுத்துக்கு கீழான உடல் முழுதும் மூடியபடியான ஒரு பெரும் ஜாடியில் சங்கியிலில் கட்டிப் போடுவது இந்த தண்டனை.

திருமணத்திற்கு வெளியே, தகாத உறவில் இருந்து வரும் பெண்ணுக்கு மூக்கை அறுக்கும் தண்டனை வழங்கப்பட்டு வந்துள்ளன.

கணவனுக்கு அடங்காத அல்லது தகாத உறவில் இருக்கும் பெண்களை அரைநிர்வாணமாக ஊர் சாலை முழுக்க சங்கிலியால் கட்டி இழுத்து செல்வார்கள். வழி எங்கிலும் ஊர் மக்கள் அவர் மீது கல் எறிந்து அடித்து, அவரை தகாத வார்த்தைகளில் திட்டுவார்கள்.

பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு

பாலியல் தொழில் அல்லது தகாத உறவில் இருக்கும் பெண்களை, இரும்பு நாற்காலியில் அமர்த்தி, உடல் எங்கிலும் சூடு வைத்து கொடுமைப்படுத்துவார்கள். இந்த தண்டனையை தாண்டி உயிருடன் வந்தால், அவரை நீரில் மூழ்கடித்து கொன்றுவிடுவார்கள்.

திருட்டு அல்லது சூனியம் செய்யும் பெண்களுக்கு

திருட்டு அல்லது சூனியம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் பெண்களை, ஓடும் ஆற்றில் கை, கால்களை கட்டி மூழ்கடித்து கொன்றுவிடுவார்கள்.

திருட்டு, சூனியம் மற்றும் துரோகம் செய்யும் பெண்களை ஊர் நடுவே ஒரு மர கம்பத்தில் கட்டி வைத்து, தீயில் எரித்து கொன்றுவிடுவார்கள்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்