3200 வருடங்கள் பழமைவாய்ந்த பாலாடைக்கட்டி எகிப்திய கல்லறையினுள் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in சிறப்பு

பண்டைய எகிப்திய கல்லறையினுள் மிகப் பழமையான திண்ம பாலாடைக்கட்டியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பசுப்பால் மற்றும் ஆடு/மறியாட்டுப் பால் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறு உடைந்த குளையினுள் நிரப்பப்பட்டிருந்த இந்த பாலாடைக் கட்டியானது கிறிஸ்துக்கு முன் 13 ஆம் நூற்றாண்டுக்குரிய கல்லறையொன்றிலிருந்து பெறப்பட்டிருக்கின்றது.

இக்கல்லறை Memphis எனும் புராதன நகரத்தின் தலைவரது கல்லறை என்பது குறிப்பிடத்தக்கது.

Analytical Chemistry எனும் பக்கத்தில் கடந்த ஜீலை, 25 இல் இது தொடர்பான விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இப் பாலாடைக்கட்டி சில நூறு கிராம் திணிவுடையது. இது பால் மற்றும் புரதத்திற்கு மேலதிகமாக சில பக்ரீரிய எச்சங்களையும் கொண்டிருந்தது.

இப் பக்ரீரியா புரூசெல்லா நோய்க்கு காரணமான பக்ரீரியா. இது அக்கால மக்கள் இந்நோயினால் பாதிக்கப்ட்டிருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்களை தருவதாக உள்ளது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்