வயிற்று கோளாறுகளுக்கு பயனளிக்கும் மில்லிபெட்ஸ் மீதான லெமூர்ஸின் கடி

Report Print Givitharan Givitharan in சிறப்பு

இவ் இயற்கை உலகில் ஒவ்வொரு அங்கியும் அதற்குரிய தனித்தான மருத்துவ இயல்புகளைக் கொண்டிருக்கத்தான் செய்கின்றன.

அண்மையில் Primates ஆய்வுப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், உணவுக் கால்வாயில் வாழும் ஒட்டுண்ணிகளால் உண்டாகும் அரிப்பு மற்றும் உடல் எடை வீழ்ச்சி போன்ற நோய் நிலைமைகளை எவ்வாறு மில்லிபெட்ஸ் மீதான லெமூர்ஸ் கடியைக் கொண்டு சிகிச்சையளிக்கலாம் என்பது வெளியிடப்பட்டுள்து.

இதற்கென ஆய்வாளர்கள் மடகஸ்காரிலிலுள்ள கிரின்டி காட்டில் 5 வகுப்பு லெமூர்ஸினை ஆய்வுக்குட்படுத்தியிருந்தனர்.

இக் காலகட்டத்தில் பல வகையான விலங்குகள் மில்லிபெட்ஸ் மீது கடிகளை மேற்கொண்டிருந்தது.

விளைவாக பெருமளவு செம்மஞ்சள் நிறமான பதார்த்தம் உற்பத்திசெய்யப்பட்டது. உண்மையில் இது உமிழ்நீரினதும், மில்லிபட்டின் உடல் சுரப்பினதும் கலவையாக இருந்தது.

லெமூர்ஸ் மில்லிப்பெட்டைக் கடித்த பின் அவற்றின் வால், குதம், இலிங்க அங்கங்களில் அதனை தேய்த்தது. சில லெமூர்ஸ் மில்லிபெட்டை உண்கொண்டிருந்தது.

பொதுவாக அங்கிகள் மற்றைய அங்கிகள் மீது தேய்ப்பதன் நோக்கம் அவற்றுடன் உரையாடல் மேற்கொள்வது, நச்சுப் பதார்த்தங்களை அகற்றுவது மற்றும் தமக்கான மருத்துவத்தைப் பெற்றுக்கொள்வது என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு லெமூர்ஸ் தேய்ப்பது மற்றம் அதன் சுரப்புக்களை உட்கொள்வது மருத்துவத் தேவைக்காக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மில்லிபெட்ஸ் கொண்டுள்ள பதார்த்தம் benzoquinone, இது இயற்கையில் காணப்படும் நுளம்பு விரட்டி. இதைப் பயன்படுத்தி லெமூர்ஸ் தமது உணவுக்கால்வாயில் காணப்படுகின்ற ஒட்டுண்ணிகளை விரட்டுகின்றன என நம்பப்படுகிறது.

மில்லிபெட்ஸ் ஆனது இரசாயனங்களின் களஞ்சியம். இவை அதை எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவென பயன்படுத்துகின்றன. இவை அமிலங்களாக, காரங்களாக காணப்படுகின்றன. இவை தூக்கத்துக்கான, அரிப்புகளுக்கான தீர்வை தருவதுடன் மற்றைய விலங்குகளுக்கு நச்சாகவும் காணப்படுகின்றன.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்