மர்மமான கரிய நிற கிரனைட் கல் சவப்பெட்டி எகிப்தில் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in சிறப்பு

மர்மமான கரிய நிற கிரனைட் கல் சவப்பெட்டியொன்று அலக்ஸ்ஷான்ரியா, எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தோற்கடிக்கப்பட்ட அலக்ஸ்ஷான்டர் காலத்திற்கு பிற்பட்ட காலத்திற்குரியது எனத் தெியவருகிறது.

இது இந்த மாத ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போது இது அலக்ஸ்ஷான்டரினது உடலைக் கொண்டிருக்கலாம் என்றும், அதை திறப்பது சாபங்களை தரக்கூடும் எனவும் வதந்திகள் பரவியிருந்தன.

ஆனால் இது எதுவும் உண்மையல்ல. மாறாக சகிக்கமுடியாத துர்நாற்றம் கொண்ட கழிவுநீர், கழிவுநீருடன் மூன்று மண்டையோடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது படைவீரர்களுடையதாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்த சவப்பெட்டி 9 அடி நீளமுடையது, 5 அடி அகலமுடையது, 6 அடி உயரம். அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவைகளில் இதுவே மிகப்பெரிது.

தற்போது இது யார் இவர்கள், எதற்காக இறந்து போனார்கள், எதற்காக இவ்வளவு பெரிய சவப்பெட்டியில் வைத்துப் புதைக்கப்பட்டனர் போன்ற பெரும் கேள்விகளை ஆய்வாளர்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

இது அக்காலத்திற்குரிய போர் வீரர்களினுடைதாக இருக்கலாம் என நம்பப்படுவதுடன் அதன் வயது இன்னும் தெளிவாக அறிய முடியவில்லை.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்