8000 ஆண்டுகள் பழமைவாய்ந்த எச்சங்கள் தென்கிழக்காசிய வம்சாவழி பற்றி சொல்லும் மர்மமென்ன??

Report Print Givitharan Givitharan in சிறப்பு

அவர்கள் Hoabinhian என அழைக்கப்படும் வேட்டையாடி சேகரிக்கும் பழக்கமுடைய கிட்டத்தட்ட 40 000 ஆண்டுகளாக 4 நூற்றாண்டுகளுக்கு முன்னர் விவசாயம் தோன்றும் வரையில் வாழ்ந்த பழங்குடியினர்.

இவ் வரலாற்றுக்கு முற்பட்ட பழங்குடியினர் தோட்டங்களின் வருகையுடன் மறைந்துபோயினர். ஆயினும் அவர்களது வாழ்க்கை முறை பற்றிய தெளிவான கண்ணோட்டம் இதுவரையில் இருந்ததில்லை.

கேள்வி யாதெனில், உள்நாட்டு பழங்குடியினர் விவசாயத்திற்கு மாறியிருந்தனரா அல்லது சீனாவிலிருந்து வந்த விவசாயிகள் இவர்களின் வழக்கத்தினை மாற்றியிருந்தனரா என்பதே.

அண்மையில் மெற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வுகள் இவ்விரு கொள்கைகளும் முழு அளவில் உண்மையை பிரதிபலிக்கவில்லை என்கின்றது.

இவர்களது ஆய்வு Hòabìnhian காலம் தொடங்கி Iron Age வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியிருந்தது, முடிவில் தற்போதைய தென்கிழக்காசிய குடியினர் குறைந்தது 4 பழங்குடியினரையாவது பிரதிபலிக்கின்றமை தெரியவந்திருக்கிறது.

இது தாங்கள் முன்னர் கருதியதிலும் மிக சிக்கலானதாகவுள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள்.

இதற்கென மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, வாவோஸ் மற்றும் யப்பான் நாடுகளுக்குரிய ஆதி என்பு எச்சங்களிலிருந்து DNA பிரித்தெடுக்கப்பட்டு ஆராயப்பட்டிருந்தது.

மொத்தமாக 26 பழங்கடி மரபணுத் தொடர் ஆராயப்பட்டிருந்தது. அதில் 25 தென்கிழக்கு ஆசியாவிற்குரியது, அதிலொன்று யப்பானுக்குரியது. இது தற்போதைய வம்சாவழியினரின் DNA உடன் ஒப்பிடப்பட்டிருந்தது.

முடிவுகள் விவசாயத்தின் தோற்றம் மற்றும் குடியமர்வு இரண்டும் சிக்கலானதாகவுள்ளதுடன் ஏற்கனவே உள்ள விபரணங்களிலும் மிக தெளிவான கண்ணோட்டத்தை வழங்குவதாகவும் சொல்லப்படுகிறது.

மற்றைய குடியமர்வுகளுக்கு மேலாக வேட்டையாடிச் சேகரிக்கும் இயல்புடைய Hòabìnhian இனத்தவரும், மேற்காசிய விவசாயிகளும் ஒருங்கே தற்போதைய வம்சாவழிக்கு வித்திட்டதாக தெரியவருகிறது.

மேலும் Harvard University இனால் மேற்கொள்ளப்பட்டிருந்த தனியான ஆய்வும் 50 000 ஆண்டுகளுக்கதிகமாக எவ்வாறு குடியமர்வுகள் தென்கிழக்காசிய மக்களின் பாரப்பரிய அமைப்பில் பாதிப்பை செலுத்தியிருந்தது பற்றிய DNA பகுப்பாய்வில் ஈடுபட்டிருந்தது.

இவர்களுக்கிடையில் முன்பு நீண்டகாலமாக நிலவிவந்திருந்த கொள்கைகள் நியாயப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இவர்கள் DNA இனைப் பாதுகாக்க முடியாத இது போன்ற வெப்பம் மற்றும் குளிர் காலநிலைகளைக் கொண்ட பகுதிகளுக்கான பாரம்பரிய கூர்ப்பு தொடர்பில் ஒரு புதிய தளத்தையும் முன்வைத்துள்ளனர்.

இவ் ஆய்வுக்கென பழங்குடியினரின் DNA இனை மீட்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டிருந்ததாக ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள். உண்மையில் 26 மனித மரபணு அமைப்புக்கள் பெறப்பட்டு ஆராயப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்