மெசபடோமியாயர்கள் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் பீர் அருந்தியமைக்கான சான்று

Report Print Givitharan Givitharan in சிறப்பு

தற்போது வரை மெசபடோமியாயர்கள் பெரிய பொதுவான பாத்திரங்களில் மதுபானம் அருந்தியதாக தொல்பொருளியலாளர்கள் நம்பியிருந்தனர்.

ஆனால் தற்போதைய ஆய்வின்படி 3 500 ஆண்டுகளுக்கு முன்பே தற்போதைய குடிகாரர்களைப் போன்றே தனித்தனிப் பாத்திரங்களில் அருந்தியமை தெரியவருகிறது.

Archaeological Science பக்கத்தில் வெளியிடப்பட்ட இவ் ஆய்வறிக்கையானது 14 ஆம் நூற்றாண்டில் மெசபடோமியாயர்களின் குடிப்பழக்க கலாசாரத்தை வெளிப்படுத்துகிறது.

அதன்படி ஆய்வாளர்கள் கூறுகையில் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட பல்வேறு வகையிலான பாத்திரங்கள் அந் நாகரிக மக்களின் பரிணாம மாற்றத்தையும் காட்டுவதாக சொல்கின்றனர்.

இக் குடி பாத்திரங்கள் சிறிய வைன் பாத்திரத்திலிருந்து, பெரிய தற்போதைய குடிபாத்திரங்கள் வரையில் வேறுபடுவதாக கூறுகின்றனர்.

விஞ்ஞானிகள் நவீன வாயு வண்ண அச்சு (Gas Chromatography) மூலமாக மேற்படி பாத்திரங்களில் பீரின் புதைபடிவ அடையாளங்களை இனங்கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்