மனதை பதைபதைக்கச் செய்யும் பண்டைய கால அதிர்ச்சியூட்டும் கருகலைப்பு முறைகள்

Report Print Kavitha in சிறப்பு
343Shares
343Shares
ibctamil.com

கருக்கலைப்பு முதன்முதலாக எகிப்தியர்கள் செய்ததாக வரலாறு கூறுகிறது.

இந்த வழக்கம் கி.மு 500 ஆம் நூற்றாண்டிலேயே சீனாவில் தோன்றி பழக்கத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆரம்பத்தில் விஷச் செடிகள், விதைகள் ஆகியவற்றைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதன் பின்னர் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு கருக்கலைக்கும் முறை வந்திருக்கிறது.

அப்போதே பல நாடுகளில் கருக்கலைப்பு என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது.

1950களில் சீனாவில் கருக்களைப்பு குற்றமாக பார்க்கப்பட்டது. 1980களுக்கு பிறகு கருக்கலைப்பு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டின் ஒரு அம்சமாகவே அது பார்க்கப்பட்டது.

இதனை சில நாடுகள் அங்கீகரிப்பதும், பல நாடுகள் தடை விதிப்பதும் நடந்திருக்கிறது.

தடையிருந்த நாடுகளில் முறைகேடுகளாக பெண்கள் கருக்கலைப்பு செய்து கொண்டார்கள். விளைவு பல்லாயிரக்கணக்கான பெண்கள் மரணம் அடைந்தார்கள்

மிக கொடூரமானது என்று மனதை பதைபதைக்கச் செய்யும் வகையில் ஆரம்ப காலங்களில் நடத்தப்பட்ட கருக்கலைப்பு பற்றிய சில தகவல்கள்.

 • எகிப்தியர்கள் கையாண்ட கருக்கலைப்பில் முதலையின் கழிவுகளை சேகரித்து உருண்டையாக பிடித்து காய வைத்து அதனை கர்ப்பமடைந்திருக்கும் பெண்ணின் பிறப்புறுப்பில் வைத்து விடுகிறார்கள். கழிவில் இருக்கும் சில சத்துக்கள் மூலமாக கரு கலைந்துவிடும் என்கிறார்கள்.
 • அதிக விஷத்தன்மையுள்ள பெனாய்ராயல் என்ற டீயைக் கொண்டு உருவாக்கப்பட்ட டீ கருக்கலைப்பிற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. புதினா இலைகளை ஒத்ததாக இதன் இலை இருக்கும். இந்த இலைகள் ஐந்து கிராம் அளவு போதுமானது.
 • ஹிப்போக்ரேட்ஸ் என்ற கிரேக்க மருத்துவர் ஆலேசனைப்படி நன்றாக குதிக்க வேண்டும். ஒவ்வொரு முறை குதிக்கும் போதும் உங்களுடைய கால்கள் மடக்கி பின்னால் பட வேண்டும். இப்படி செய்யும் போது கர்ப்பப்பை பலவீனமடைந்து கரு வெளியேறுமாம்.
 • ஒரு மண் பானையில் பாதியளவு தண்ணீரை வைத்து அதில் இருபதுக்கும் மேற்பட்ட வெங்காயத்தை தோல் நீக்கி அந்த தண்ணீரில் போட்டு வேக வைத்து அந்த தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து அந்த புகை நேரடியாக படும்படி உட்கார்ந்து கொள்கிறார்கள். அந்த புகையால் கருக்கலைப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
 • ஒட்டகத்தின் எச்சில், மரத்தில் அதிகமாக வசிக்கக்கூடிய எறும்புகள், கருப்பு நிற மானின் வாலில் இருக்கும் முடி இவை எல்லாவற்றையும் கரடியுன் கொழுப்புடன் சேர்த்து அரைத்து கருப்பைக்குள் வைப்பார்களாம்.
 • அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேற்றுவது, உரிய சிகிச்சைகள் கிடைக்காது பெண்கள் தொடர்ந்து மரணமடையவே இந்த வழக்கம் அப்போதே கைவிடப்பட்டிருக்கிறது.
 • 1800களில் கர்பிணிகளின் பல்லைப் பிடிங்கினால் கரு கலைந்திடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுவும் மயக்க மருந்து எதுவும் கொடுக்காமல் பல்லைப் பிடுங்குவார்களாம். அதீத வலி தாங்காமல் அந்தப் உடலை முறுக்கிக் கொண்டு கத்தும் போது கரு கலைந்து விடும் என்றிருக்கிறார்கள்.
 • செடிகளில் இருக்கக்கூடிய எர்காட் எனப்படுகிற ஒரு வகை பூஞ்சானை கருப்பையில் வைப்பார்கள். வயிற்று வலி, வாந்தி உட்பட பல தொந்தரவுகள் ஏற்படும். இதனால் கரு கலைகிறதோ இல்லையோ பெண்களின் உயிர் பிரியுமாம்.
 • வழக்கத்தை விட மிக இறுக்கமான பெல்ட் அணிந்து நாள் முழுவதும் இருக்கச் செய்கிறார்கள். வயிற்றுக்கு திடீரென்று கிடைக்கிற அதீத அழுத்தம் காரணமாக கருக்கலையும் என்கிறார்கள்.
 • கர்ப்பமாக இருக்கும் பெண்களை குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடு என்பார்களே அதைப் போல குழந்தை வளரக்கூடாது என்றால் நீயும் சாப்பிடக்கூடாது என்று சொல்லி நாட்கணக்கில் பட்டினி கிடக்கிறார்கள். அதோடு வழக்கமான உடல் உழைப்பு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் கருவிற்கு கிடைக்கிற சத்துக்கள் கிடைக்காமல் கரு கலைந்து விடும் என்கிறார்கள்.
 • அந்தக் காலத்தில் பெண்கள் கருக்கலைப்பிற்கு என்று கரண்ட் ஷேர் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்கென்று பிரத்யோக சேர் இருக்கிறது. அதில் உட்கார வைக்கப்படும் பெண்களின் தொடை மற்றும் இடுப்பினைச் சுற்றி கரண்ட் பாய்ச்சப்படுகிறது.
 • கருக்கலைப்பு தடை இருக்கிற பகுதிகளில் எல்லாம் யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சொல்லி விஷத்தன்மை வாய்ந்த காய், அதன் குச்சிகளை எல்லாம் கருக்கலைப்பிற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்