காற்றில் மிதக்கும் கல்! பறவைகள் தற்கொலை செய்யும் பயங்கரமான இடம்: எங்கு தெரியுமா?

Report Print Printha in சிறப்பு
434Shares
434Shares
lankasrimarket.com

இந்தியாவில் உள்ள மர்மங்கள் மற்றும் அதிசயங்களை குறித்து பலவற்றை அடிக்கிக் கொண்டே செல்லலாம்... அவற்றில் சில வித்தியாசமான விடயங்கள்....,

காற்றில் மிதக்கும் கல்

மகாராஷ்டிர மாநிலத்தின் புனே மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஷிவாபூர் எனும் இடத்தில் காற்றில் மிதக்கும் கல் ஒன்று காணப்படுகிறது.

200 கிலோ எடை கொண்ட இந்தக் கல்லை 11 பேர் தங்கள் விரல்களால் தொட்டு ”கம்மார் அலி தர்வேஷ்" என்று சொன்னால் காற்றில் மிதக்க ஆரம்பித்து விடுவதாக அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.

கம்மார் அலி என்ற அற்புத சக்தி படைத்த சூஃபி ஞானி இப்பகுதியில் வாழ்ந்ததாகவும், அவருடைய சக்தியால் தான் இந்தக் கல் காற்றில் மிதப்பதாகவும் உள்ளூர் மக்கள் நம்பி வருகின்றனர்.

ஆனால் இந்த கல் காற்றில் மிதக்கும் என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

மேக்னடிக் ஹில்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மாவட்ட தலைநகர் லே அருகில் அமைந்துள்ள மேக்னடிக் ஹில்லில் கார் அல்லது பைக்கில் செல்லும் போது, பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டால் கூட, அது இயங்குமாம்.

எப்படியெனில், அந்த மலையில் உள்ள காந்தப் பண்புகள் வாகனங்களை மலையின் மேலே இழுக்கும் தன்மை கொண்டது.

எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்து விட்டு பெட்ரோல் இல்லாமலே இங்கு பயணிக்கலாம்.

ரூப்குந்த் லேக்

உத்தரகாண்ட்டின் உறைந்த ஏரியான ரூப்குந்த் லேக்கில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் காட்டிலாக்க அதிகாரி ஏரி முழுக்க எலும்புக்கூடுகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.

அதுமட்டுமின்றி அந்த ஆண்டு கோடை காலத்தில் ஏரி உருகிய போது இன்னும் பல மனித எலும்புக்கூடுகள் வெளியே வந்துள்ளது.

இரண்டாம் உலகப்போரில் இந்தியா நோக்கி வந்த ஜப்பானிய சிப்பாய்களின் எலும்புக்கூடுகளாக இது இருக்கலாம் என முதலில் சொல்லப்பட்டது.

ஆனால் அறிவியல் அறிஞர்கள் இந்த எலும்புக்கூடுகள் 9-ம் நூற்றாண்டில் இறந்த இந்திய பழங்குடியினரின் கூடுகள் என்று தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

இரட்டையர் கிராமம்

கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடிஞ்சி கிராமம் இரட்டையர்கள் கிராமம் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

இந்த கிராமத்தில் 2008-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது பல சுவாரசியமான விடயங்கள் வெளிவந்தது.

அதாவது முதலில் 100 இரட்டையர்கள் என்று கணக்கிடப்பட்டு, 200 இரட்டையர்கள் என்றாகி தற்போது 400 ஜோடி இரட்டையர்கள் இந்த கிராமத்தில் உள்ளனர்.

அதுவும் உலக அளவில் இந்தியா இரட்டையர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் இந்த கிராமம் உலகப் பிரசித்தி பெற்று விட்டது.

ஷனி ஷிங்க்னாபூர்

ஷிர்டியில் இருந்து 73 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஷனி ஷிங்க்னாபூர் என்ற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாதாம்.

இங்குள்ள சனி பகவான் கோவிலில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவான் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை திருட்டிலிருந்து காத்து வருவதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.

பறவைகள் தற்கொலை செய்யும் இடம்

அசாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஜதிங்கா எனும் கிராமம் பறவைகளின் தற்கொலை பூமியாக கருதப்படுகிறது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொள்கின்றது.

ஆனால் இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றது. அதாவது இந்த பருவத்தில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரில் உள்ள காந்தப் பண்புகள் மாறி அது பறவைகளின் உடலியல் இயக்கங்களை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது என்று பலரும் நம்புகின்றனர்.

அதே போல பறவைகள் கூடு அதிவேக காற்றால் சிதறடிக்கப்பட்டு பறவைகளை ஒரு ஒளியை நோக்கி திருப்பி விட்டு மூங்கில் கம்புகளை கொண்டு பழங்குடியின மக்கள் தான் அடித்துக் கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்