7 தலைமுறைகள் தாண்டி 100 கிளைகளுடன் வாழும் பனைமரம்

Report Print Kavitha in சிறப்பு
712Shares
712Shares
lankasrimarket.com

பனைமரம் என்றால் உடனே நம் நினைவுக்கு வரும் அதன் வளர்ச்சி மட்டுமே.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 200 ஆண்டுகள் பழமையான பனைமரம் ஒன்று 7 தலைமுறையாக ஒன்று 100 கிளைகளுடன் காணப்படுவது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாகியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பண்ணந்தூர் கிராமத்தில் 7 தலைமுறையாக பராமரித்து வருகின்றனர் விவசாயி அப்பாஜி குடும்பத்தினர்.

இந்த அதிசய பனைமரத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

இந்த பனை மரத்தில் கிளைகள் படர்ந்து, ஒவ்வொரு கிளையிலும் ஒரு மரம் வளர்ந்தது தற்போது 7 தலைமுறைகளைத் தாண்டி, 100 கிளைகளுடன் பரப்பி இந்த அதிசய பனைமரம் நிற்கிறது.

இந்த பனைமரத்தை அப்பாஜி கூறும்போது, ‘‘எங்க முன்னோர் காசியில் இருந்து ஒரு பனை விதை எடுத்து வந்து, இங்கு இருக்கிற பெருமாள் கோயில் எதிரே நட்டு வளர்த்தாங்க. ‘இந்த அதிசய பனை மரத்தால் தான் எங்கள் ஊருக்கு பண்ணந்தூர் என்கிற பெயரே வந்திருக்கும்” என்கின்றனர் கிராமத்து இளைஞர்கள்.

கடந்த ஆண்டு பெய்த கடும் மழை, சூறாவளிக் காற்றில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த பனைமரத்துக்கு சிறு சேதாரம்கூட இல்லை’’ என்றார் பெருமையுடன் கூறுகின்றார்.

“விஞ்ஞானிகள் பலர், இதன் விதைகளை எடுத்துச் சென்று பதியமிட்டனர். ஆனால் செடி வரவில்லை.

அதேநேரம் மற்றொரு செடி இந்த பனைமரத்தின் கீழே முளைத்தது.

அதை தாய் மரத்தின் எதிரே நட்டு வளர்த்தோம். அதிலும் கிளைகளுடன் மரம் வளரத் தொடங்கியது.வேறு இடத்தில் நட்டு வைத்த எந்த விதையும் வளரவில்லை’’ என்றனர்.

வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மரபணு மாற்றத்தால் இதுபோன்ற அதிசயங்கள் நிகழும்’’ என்றனர்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்