நாம் வாழும் பூமியிலுள்ள விசித்திர உயிரினங்கள்

Report Print Kavitha in சிறப்பு
183Shares
183Shares
lankasrimarket.com

உலகில் எவ்வளவோ அதிசயங்களும் அற்புதங்களும் நாம் பார்த்து கேட்டு அறிந்திருப்போம். ஆனால் நமது கற்பனைக்கும் எட்டாத பல விசித்திரங்களும் கோடிக்கணக்கில் உள்ளன.

இந்த வரிசையில் நாம் கேள்விப்படாத பார்க்காத உயிரினங்கள் பலவுள்ளன, அவற்றின் தொகுப்பை நாமும் தெரிந்துக்கொள்ளுவோம்.

நீந்தாத மீன்

இது கலாபகோஸ் என்ற தீவில் இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் சிகப்பு நிற வாய் தான் இதனுடைய அடையாளம், இதற்கு நீச்சல் தெரியாது.

இந்த மீன் நடக்க மட்டுமே செய்யும், கடலின் ஆழத்தில் மட்டுமே இது இருக்கும்.

பாண்டா எறும்பு

இது சிலியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூச்சி இனத்தின் முதுகில் நிறைய முடிகள் இருக்கும்.

இதிலிருக்கும் ஜீன்களால் உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் முடி இருப்பதால் இதற்கு பாண்டா பூச்சி என்று பெயர்.

வரிகள் இல்லாத வரிக்குதிரை

ஆப்ரிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விலங்கினம் கால் பகுதியில் மட்டும் வரிக்குதிரை போன்ற வரிகள் இருக்கும்.

அதன் செயல்பாடுகள் எல்லா ஒட்டகச்சிவிங்கியைப் போல இருக்கும்.

கடல் பன்றி

இந்த விலங்கினம் கடலின் ஆழத்தில் மட்டுமே இருக்கும், சுமார் கடலிலிருந்து 1000 மீட்டர் ஆழத்தில் இருக்கும்.

அங்கே வளர்ந்திருக்கும் செடிகளையே இவை உணவாகக் கொள்ளும்.

மஞ்சள் முள்

ஆப்ரிகாவில் உள்ள மடாகஸ்கரில் இந்த விலங்கு கண்டுபிடிக்கப்பட்டது.

உள்ளங்கையில் அடங்கிடும் மிகச்சிறிய உருவமான இதனை அதனின் வித்யாசமான ஓசையை வைத்து தான் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பாம்பின் ஒலியைப் போலவும் சில பூச்சிகள் கத்துவது போலவும் இவற்றின் ஓசை இருக்கும்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்