செய்தி வாசிக்கும் ரோபோ

Report Print Thuyavan in சிறப்பு

யார் இந்த "எந்திர லோகத்து சுந்தரி" என்று கேட்கும் அளவிற்கு அழகாக இருக்கிறது "எரிக்கா" எனும் ரோபோ.

ஜப்பான் விஞ்ஞானிகளால் தயரிக்கப்பட்ட இந்த அதிநவீன ரோபோ நிகழ்ச்சி தொகுப்பாளராக செய்தி வாசிக்கிறது என்றால் ஆச்சர்யம் தானே.

இதை உருவாக்கியது யாரென்று பார்த்தால் ஜப்பான் நாட்டு ஒசாகா பல்கலைகழகத்தை சேர்ந்த ஹிரோஷி இசிகுரா ஆவார்.

இவர் தான் அங்குள்ள ரோபோடிக் ஆயிவகத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் "சோபியா" என்னும் ரோபாவையும் தயாரித்த இக்குழுவே "எரிக்கா" ரோபோவை தயார் செய்திருக்கிறது.

தற்போது தொழில் நுட்பத்தின் வசதியால், எரிக்கா ரோபோவை தொலைக்காட்சி நிகழ்சிகளில் செய்தி தொகுப்பாளராக பணிபுரிய வைக்கவே விஞ்ஞானிகள் தயார் படுத்தி வருகின்றனர்.

உருவத்திலும், அசைவிலும் மனிதர்களைப் போல் இருக்கும் எரிக்கா ரோபோ உரையாடும் திறனும் கொண்டுள்ளது என்றால் அசத்தல் தானே.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்