சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: லண்டனில் சாதித்த இந்தியர்

Report Print Thuyavan in சிறப்பு
258Shares
258Shares
ibctamil.com

பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரின் அருமையையும், அதன் அத்தியாவசியத்தையும் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

இன்றைய காலகட்டத்தில் இயற்கையின் பெரும்பாலான பகுதிகள் மாசுபட்டிருப்பதால் நீரை எங்கிருந்து பெற்றாலும் சுத்திகரித்த பின்னரே அருந்த முடிகிறது.

இதற்கு சரியான தீர்வாக பிரித்தானியாவில் வசிக்கும் இந்தியரான திரு.பிரதிக் கோஷ் தனது இறுதியாண்டு ப்ராஜெக்ட்டில் ஓர் கருவியை உருவாக்கியிருக்கிறார்.

இக்கருவியை வெற்றிகரமாக செயல்பட வைத்து பல்கலைக்கழத்தில் இருப்பவர்களையும் அசத்தியிருக்கிறார். இதன் வடிவமைப்பும், செயல்படும் விதமும் மிகவும் எளிமையானது, குழந்தைகள்கூட இதன் செயல்பாட்டை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இந்தக் கருவியின் அடிப்படை இயற்கையின் ஆவியாதல் நிகழ்வே என்று சொன்னால் நம்பமுடிகிறதா? இதன் மூலமாக செலவே இல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெறலாம். இந்தக் கருவிக்கு 'ட்ராப் பை ட்ராப்' என்று பெயரும் வைத்திருக்கிறார் பிரதிக்.

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தை சொந்த ஊராக கொண்ட பிரதிக் லண்டனில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான Royal college of arts-ல் படிக்கும்போதே இந்த யோசனை உதித்ததாம்.

கருவியின் வடிவமைப்பு விவரம்

சாதாரண மனிதனின் உயரம் கொண்டுள்ள இக்கருவியில் ஒரு கண்ணாடிக்குடுவைதான் பிரதானமான பகுதி. அதற்குள்ளே செடிகள் வளர்வதற்கான இடம் இருக்கிறது.

வெளியில் சுத்திகரிக்கப்பட வேண்டிய நீரை உள்ளே ஊற்றுவதற்காக ஒரு குழாய் அமைக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடிக்குடுவைக்குள்ளே ஆவியாகும் நீரை வெளியே கொண்டுவந்து சேகரிக்கவும் ஒரு அமைப்பு கொடுக்கப்பட்டிக்கிறது.

ஒளிச்சேர்க்கை நடைபெறுவதற்கு ஒளி தேவைப்படும் என்பதால், கருவிக்கு வெளியே ஒரு விளக்கு பொருத்தப்பட்டிக்கிறது.

சுத்திகரிக்கப்பட வேண்டிய நீரை உள்ளே ஊற்றிவிட்டுக் காத்திருந்தால் போதும் சில மணி நேரங்களில் ஒரு கோப்பை அளவுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெறலாம்.

இதன் மூலமாக 24 மணி நேரத்தில் 2, 3 கோப்பை வரை நீரை பெற முடியும், இதை வீட்டில் பயன்படுத்தும்பொழுது சுத்தமான குடிநீர் மட்டுமின்றி புத்துணர்ச்சியும் கிடைக்குமென்று கூறுகிறார்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்