இறைவனாக மாறிய இளைஞர்: வைரலாகும் செயல்

Report Print Gokulan Gokulan in சிறப்பு

மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தெருவில் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

மும்பையை சேர்ந்த இளைஞர் அமன், சம்பவதினத்தன்று வழக்கமாக மாலை நேரத்தில் தனது சகோதரருடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் ஒரு குப்பை கிடங்கு அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ-வை தாண்டிச்செல்லும் போது அமனுக்கு அழுகைகுரல் கேட்டுள்ளது.

செல்லபிராணிகளின் ப்ரியரான அமன் ஒருவேளை பூனையாக இருக்குமோ ? என்று பார்க்கச்சென்ற போது துணியில் சுற்றி இருந்த பெண் குழந்தையை கண்டெடுத்தார்.

சற்றும் தாமதிக்காமல் உடனே பொலிசாரை தொடர்பு கொள்ள முயன்றார், அவரால் முடியாத பட்சத்தில் சமூகவலைத்தளத்தில் பதிவொன்றை பகிர்ந்தார்.

அந்த பதிவில், பிறந்து 3 அல்லது 5 நாட்கள் இருக்கும், குழந்தையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன்! உதவுங்கள் என ட்வீட் செய்தார்.

இதைக்கண்டு உடனே பதிலளித்த மும்பை காவல் துறையினர் உடனடியாக அமனை தொடர்பு கொண்டனர்.

அவர் கூறுகையில், இந்த மாதிரியான சம்பவம் நான் திரையில் வரும் பழங்கால படங்களில் தான் பார்த்திருக்கிறேன். இதைக்கண்ட என் குடும்பத்தினர் முதலில் ஆச்சர்யமடைந்தனர், பிறகு என்னை கண்டு பெருமிதம் கொண்டனர் என தெரிவித்துள்ளார்.

பொலிசாருடன் இணைந்து குழந்தைக்கு மருத்துவ உதவியையும் செய்து வரும் அமன், குழந்தையை அனாதை இல்லத்தில் சேர்க்கும் வரை சேவை தொடரும் என்கிறார்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்