நிஜ வாழ்க்கையில் குள்ள மனிதர்கள்! சிந்திக்க வைக்கும் பதிவு

Report Print Gokulan Gokulan in சிறப்பு

மனித இனத்தை அடையாளப்படுத்தும் வகையில் குறிப்பிட்டு சொல்லப்படும் விஷயங்களில் எப்படி உடலின் நிறம், வடிவம், எடை, உறுப்புகள் இருக்கின்றனவோ அதே போல் உயரம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.

பொதுவாகவே நம்மில் பல பேர் மற்றவர்களுடன் ஒப்பிட்டால் உயரம் கூடவோ, குறையவோ இருப்போம்.

அப்படி மிக மிகவும் உயரம் குறைவாக இருப்போர்களை லில்லி புட் என அழைப்பர்.

நம்பிக்கை உள்ளவர்கள் இவர்களை குள்ள மனிதராக பார்ப்பர், மூடநம்பிக்கை உள்ளவர்கள் இவர்களை ஏலியனாகவும், இறைநம்பிக்கை உள்ளவர்கள் இவர்களை சித்தர்களாக சித்தரிகின்றனர்.

நம் அன்றாட வாழ்வில் டிவி மற்றும் இணையதள செய்திகளில் பார்க்கும் லில்லிபுட் எனப்படும் குள்ள மனிதர்கள் ஏன் நம்மை கண்டு ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும்?

சமீபத்தில் இணையதளத்தில் வெளியான வீடியோ கட்சியில் இந்த அபூர்வ தோற்றமுள்ள லில்லிபுட் சடாலென ஓடிய காட்சி கேமராவில் பதிவாகி ஜூம் செய்யப்பட்டு கண்டுபிடிக்கபட்டது.

இப்படியெல்லாம் பல கோணங்களில் யோசித்து ஆராய்ந்தால், இவர்களை வாழ்வில் ஒரு முறையாவது பார்த்திட வேண்டும் என்ற எண்ணம் நம்முள் உதிக்கிறது.

சிறிய மனிதர்களை வைத்து பெரிய வியாபாரம்

பொதுவாக நாம் கண்டுகளித்த சர்க்கஸ் நிகழ்ச்சிகளை கொஞ்சம் உன்னிப்பாக நினைவில் வைத்து பாருங்கள், அதில் சாகசம் செய்வோர்கள் மட்டுமல்லாமல் ஜோக்கர் வேடத்தில் சிறிய உயரம் கொண்டு இங்கும் அங்குமாய் சலாம் போடும் சர்க்கஸ் கோமாளியாக இருக்கும் கலைஞர்களை வைத்தே பாதி நிகழ்ச்சியை நடத்துவதை நாம் காணலாம்.

மேலும் ரெஸ்டாரன்ட்கள், நட்சத்திர விடுதிகள், விளையாட்டு மைதானங்களில் சிறப்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் மக்களை ஈர்க்கும் வகையில் வரவேற்க இந்த குள்ள மனிதர்களை பயன்படுத்துவர்.

இப்படி பல சவால்களை தினசரி வாழ்வில் சமாளிக்கும் இவர்கள் கேலி, கிண்டலுக்கு ஆளாகி மன உலைச்சளடைகின்றனர். கீர்த்தி சிறுதாக இருந்தாலும் மூர்த்தி பெரிதாக என்னும் பழமொழி இவர்களுக்கு கச்சிதாமாக பொருந்தும்.

நன்மை என்று இருந்தால் நிச்சயம் தீய அதிர்வுகள் இருக்க தானே செய்யும், அப்படி தீமையாய் அமைந்தது தான் இந்த லில்லி புட் வியாபாரம். ஆச்சர்யமளிக்கிறதல்லவா !

இதுதான் இன்றளவும் நிகழும் உண்மை. உதாரணத்திற்கு, நம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை எப்படி தேடித்தேடி வாங்குகிறோமோ அதே போல் இந்த லில்லி புட் என அழைக்கபடும் குள்ள மனிதர்களை தேடி சென்று போலி தரகர்களிடம் வாங்குகின்றனர் பல பணப்பேர்வழிகள்.

இதனால் அவர்களுக்கு என்ன பயன்? என்று ஆராய்ந்தால், சிலர் தங்கள் செய்த பாவங்கள் மற்றும் தோஷங்களை கழிக்கவும், ராசி பலனுக்காக வீட்டில் வைக்க விரும்புகின்றனர்.

சைக்கோபாத் அதாவது மிகவும் மனநிலை குன்றியவர்கள் இவர்களை விளையாட்டு பொம்மையாக உயிரென கூட கருதாமல் துன்புறுத்தும் நோக்கில் பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதறியாமல் இவற்றில் ஈடுபடுகின்றனர்.

இன்னும் சில பேர் இதில் கீழ்த்தனமாக அடுத்த கட்டத்தில் இறங்கி சிரிக்கும் வகையில் சிறிய வகை வெள்ளரிக்காய், கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை வைத்து இதுதான் அபூர்வபான ”லில்லி புட்” குள்ள மனிதர்கள் என ஊரை ஏமாற்றி சுத்தித்திரிகின்றனர். இந்த மோசடியை சதுரங்க வேட்டைஎன்னும் படத்தில் ஒரு காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

இப்படிபட்ட குள்ள மனிதர்களை அடிப்படையாகவும், மைய்யமாகவும் வைத்து நிறைய கதைகள், திரைப்படங்கள் இன்று வரை வலம் வந்துகொண்டிருக்கின்றன.

இன்பமாக இயல்பு வாழ்க்கை வாழும் குள்ள மனிதர்கள் பற்றி... உண்மை காதல் உலகை விட பெரியது என்று உணர்த்தி கின்னஸ் உலக சாதனையும் பெற்ற தம்பதி தான் UK-வை சேர்ந்த பாலோ மற்றும் கேட்டி அழகை பார்த்து அன்பு பரிமாறும் இக்காலத்தில் ஒருவொருக்கொருவர் நன்கு புரிந்த இன்பமாக வாழ்கின்றனர்.

இதன் அடுத்த கட்ட சாதனையாளர் சான்றாக விளங்கும் நேபாலை சேர்ந்த சந்திரா பஹதுர் மற்றும் நாக்புரை சேர்ந்த ஜோதி ஆகிய இவ்விருவரும் கூட கின்னஸ் சாதனை புரிந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

அதிக உயரமாக இருப்பவர்களுக்கு உயரம் வேண்டாம் என்ற ஆசையிருக்கும், உயரம் இல்லாதோருக்கு வளர வேண்டும் என்ற ஆசையிருக்கும். எல்லாம் சரியாக இருந்து இயல்பு வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு மன நிம்மதி வேண்டும் என்ற ஆசையிருக்கும்.

அளவிற்கு மீறி ஆசைபட்டாள் அதுவும் ஓர் வினையே !! ”உருவத்தை வைத்து மனிதனின் மனதை இடையிட வேண்டாம்” என்று கூறுவது மட்டுமல்லாமல் அவர்களை மதிக்கும் வகையில் இந்த பதிவு புதிதாய் அமையட்டும் என்று சிறிய முற்று புள்ளி வைக்கிறோம்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்