விமானங்களில் கோள வடிவ ஜன்னல்கள் ஏன்?

Report Print Gokulan Gokulan in சிறப்பு
907Shares
907Shares
ibctamil.com

விமானங்களின் பறக்கும் உயரத்தை கண்டு ரசித்த நாம், விமானங்களில் ஜன்னல்கள் ஏன் கோள வடிவில் உள்ளது என சிந்தித்ததுண்டா ?

ஜன்னல்கள் பொதுவாக பஸ், கார் உள்ளிட்டவற்றில் சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ இருக்கும். அது ஏன் விமானங்களில் மற்றும் இந்த வடிவில் இல்லை என்று ஆய்வு செய்தோமேயானால்...

1949-ம் ஆண்டு உலகின் முதலாவது வர்த்தக விமானமான ”டீ ஹாவிலேண்ட் காமட்” அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்து தயாரிப்பாக வெளிவந்த இந்த விமானங்கள் மிக நேர்த்தியான டிசைன் மற்றும் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தை கொண்ட விமானங்களாக பாராட்டுகளை பெற்றன.

அறிமுகம் செய்யப்பட்டு வர்த்தக ரீதியிலான சேவையில் இருந்த இரண்டு டீ ஹாவிலேண்ட் காமட் விமானங்கள் நடுவானில் வெடித்து ஏன் விபத்துக்குள்ளாக வேண்டும் என்று ஆராய்ந்ததில், இரு விமானங்களிலும் ஜன்னல்களில் வெடிப்பு ஏற்பட்டு விமானம் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.

அந்த விமானங்களில் சதுர வடிவில் இருந்த ஜன்னல்களால்தான் விபத்து ஏற்படுவதும் தெரிய வந்தது.

"வினா என்றிருந்தால் விடை இருக்க தானே செய்யும்". அதிக காற்றழுத்தம் கொண்ட பகுதிகளில் பறக்கும்போது ஜன்னல்களின் நான்கு முனைகள் வெளிக்காற்று அழுத்தத்தை தாக்குப் பிடிக்க முடியாத நிலை இருப்பதை விமான தயாரிப்பு துறை நிபுணர்கள் கண்டறிந்தனர்.

எனவே ஜன்னல்களில் கூர் முனை இல்லாத வகையில் வட்ட வடிவிலும், கோள வடிவிலும் உருவாக்க முடிவு செய்தனர்.

அதன் தொடர்ச்சியாகவே, இப்போது வரும் விமானங்கள் அனைத்திலும் வட்டம் அல்லது கோள வடிவிலான ஜன்னல் டிசைன் கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு வடிவமைக்கப்படும்போது வலு விழந்த பகுதி இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால், வெளிப்புற காற்றழுத்தம் ஜன்னல்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்