ரூ.5க்கு உணவு.. ரூ.10க்கு உடை! நம்ப முடிகிறதா உங்களால்?

Report Print Gokulan Gokulan in சிறப்பு
292Shares
292Shares
ibctamil.com

குறைந்தபட்ச விலையில் உணவை தினமும் ஒரு தனி மனிதரால் தரமுடியுமா ? இது சாத்தியமாகுமா ? என்ற கேள்விக்கு எடுத்துகாட்டாய் விளங்கி, சாத்தியம் என்றும் நிருபித்திருக்கிறார் நொய்டாவை சேர்ந்த அனூப் கண்ணா.

கற்பனைக்கும் எட்ட முடியாத இச்செயலை செய்யும் அனூப் கண்ணா Dadi Ki Rasoi என்ற அமைப்பின் பெயரில் தனியாகவும், குழுவாகவும் தினமும் 500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளித்து வருகிறார்.

இப்படி நன்றாக இயங்கி வரும் டாடி கி ரசோய் அமைப்பு இந்த 5 ரூபாய் விலையில் உணவளிக்க வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து பொருளாதார அடிப்படையில், காய்கறிகளின் விலைக்கு ஏற்றார் போல் தங்களை தயார்படுத்தி வருகிறது.

மேலும் இரண்டு ஸ்டால்களை புதிதாக துவங்கி அதில் பருப்பு, ரொட்டி, மசாலா போன்ற பல உணவு வகைகளை சேர்த்துள்ளது.

தன் தந்தை ஓர் சுதந்திர போராட்ட வீரர் என்றும், மகாத்மா காந்தி, முகமத் அலி ஜின்னா போன்றவர்களுடன் இணைந்து நாட்டிற்காக போராடியதால் தமக்கு சிறு வயதிலுந்தே இந்த ஆர்வம் இருப்பதாகவும் அனூப் கண்ணா கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் 30,000 ரூபாய் முதலீட்டில் கிச்சன் வசதியுடன் தொடங்கப்பட்ட இவ்விடத்தில் காலை 10:00 - 11:30 வரையிலும் மதியம் 12:00 - 2:00 மணி வரை உணவு கிடைக்கும்.

குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள் போன்ற அனைத்து தரப்பினரும் வரிசைக்கட்டி நிற்கின்றனர்.

அனூப்-ன் மகள் ஷாக்ஷி அவர்கள் கூறியே இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், மற்றும் அனூப் அவர்களின் குடும்பமும் உதவிகரமாக இருப்பதாகவும் கூறி மனதிருப்தி அடைகிறார்.

இவ்வளவு உதவி செய்யும் நீங்கள் ஏன் 5 ரூபாய்-கு வழங்க வேண்டும்? இலவசமாகவே வழங்கலாமே என்று கேட்டதற்கு சற்று யோசிக்கும் வகையில் எந்த ஒரு பொருளையும் இலவசமாக வழங்கினால் அதன் மதிப்பு குறைந்துவிடும்!

வாங்குபவர்களுக்கும் சரி வழங்குபவர்களுக்கும் சரி இலவசம் தானே என்ற மெத்தன போக்காக இருக்கும் என்று அனூப் கூறியது சிந்திக்குக்கும் வகையில் உள்ளது.

இதுமட்டுமல்லாமல் ‘Sadhbhavana store’ என்ற பெயரில் கடை தொடங்கி ரூ.10க்கு துணிகளையும் வழங்கி வருகிறார், அத்துடன் மருந்தகத்தையும் நடத்தி வரும் அனூப்புக்கு நல் உள்ளங்களும் உதவி செய்து வருகின்றனர்.

இச்சேவையை தொடர்வதே தனது ஆசை என கூறும் அனூப், மற்றவர்களும் முன்வந்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்