உலகிலேயே இவ்வளவு சிறிய விலங்குகளை நீங்கள் பார்த்ததுண்டா?

Report Print Kavitha in சிறப்பு

உலகில் நாம் எவ்வளவே அதிசயங்களை பாரத்ததுண்டு, ஆனால் இதுவரை நாம் அறிந்தும் அறியாத அதிசயங்கள் பலவுள்ளன.

அதில் ஒன்று தான் இந்த விலங்கினங்களும், தற்போது உலகிலேயே சிறிய விலங்குகளின் தொகுப்பை பார்ப்போம்.

தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில், கம்போடியா, மற்றும் பெரு நாட்டில் காணப்படும் இந்தவகையான குரங்குகள்தான் உலகிலே மிகசிறிய குரங்கினம் ஆகும்.

இவை சுமார் 11 -15 cm உயரமே வளரும், வாலின் நீளம் சுமார் 17 - 22 cm மற்றும் இதனுடைய எடை 120 கிராம், இவை பிறக்கும் பொது 15 கிராம் எடையே இருக்கும். இவற்றின் ஆயுள்காலம் 11 முதல் 15 வருடங்கள் ஆகும்.

Pygmy Rabbit

வட அமெரிக்காவில் காணப்படும் இந்த வகை முயல்கள்தான் உலகின் மிகச்சிறிய வகையாகும். நன்கு வளர்ந்த ஒரு முயலின் எடை 400 கிராம் தான் இருக்கும், உடலின் நீளம் சுமார் 24 முதல் 29 cm தான்.

Chihuahua

உலகில் காணப்படும் மிகச் சிறிய நாயினம் இதுதான். 1850 ஆம் ஆண்டுவாக்கில் மெக்சிகோவில் உள்ள Chihuahua மாநிலத்தில் கண்டுபிடிக்கபட்டது. இவை 6 - 9 இன்ச் உயரமும் 2 முதல் 12 பவுண்ட் எடையும் உடையது. இவற்றின் ஆயுள்காலம் 15 வருடங்கள் ஆகும்.

Kodkod

தென் அமெரிக்காவில் காணப்படும் இவ்வகை பூனைகளே பூனையினத்தின் மிகச் சிறியவையாகும். இவை பெரும்பாலும் சிலி மற்றும் அர்ஜென்டினாவில் காணப்படும் அரிய வகை விலங்கினமாகும் . நன்கு வளர்ந்த இந்தபூனையின் எடை 2 கிலோகிராம், 40-50 cm உயரம் தான்.

Peebles cat

Peebles cat தான் கின்னசில் இடம்பிடித்த பூனை இதன் எடை ஒரு கிலோகிராம் தான். இதனை 200ml கிளாசுக்குள் அடைத்து விடலாம்.

Thumbelina

இதுதான் உலகத்தின் மிக சிறிய குதிரை இதன் எடை 27 கிலோகிராம்தான். குள்ள குதிரையின் உயரம் 17 இன்ச் தான்.

Paedocypris

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுகளில் காணப்படும் இந்த மீன்கள் தான் உலகிலே மிகச் சிறியதாகும் அதுமட்டும்மல்ல முதுகு எலும்பு உள்ள உயிரினங்களிலே இதுதான் மிகச் சிறியதாம். இதன் நீளம் சும்மா 7.9 mm தான்.

Brazilian Gold frog

பிரேசில் நாட்டின் தென்பகுதியில் காணப்படும் இந்தவகை தவளைகள் தான் உலகிலே மிகசிறிய தவளை இனமாகும். Izecksonh's Toad என்றும் அழைக்கப்படுகிறது. இவை சுமார் 9.8 mm உடையது. இதுகூட 1 cm விட சிறியதுதான்.

Thread snake

தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் சில ஆசிய நாடுகளில் இவ்வகை பாம்புகள் காணபடுகின்றன. இவைதான் உலகிலே மிகசிறிய பாம்பினமாகும். இதன் அதிகபட்ச நீளம் 4.25 இன்ச் தான்.

Bee Hummingbird

கியுபா நாட்டில் காணப்படும் இந்தவகை பறவைதான் உலகிலேயே மிகசிறிய பறவையாகும். இதன் நீளம் 2.25 இன்ச், எடை 2 கிராம் தான்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்