இந்த ஆண்டில் யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் யார்?

Report Print Fathima Fathima in சிறப்பு
77Shares

இந்த ஆண்டு யூடியூப் காணொளி தளத்தின் மூலம் சுமார் 105 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை சம்பாதித்த டான் டிடிஎம் என்பவர் போர்ப்ஸ் இதழின் யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்திலுள்ள அல்டெர்ஷாட் என்னும் பகுதியை சேர்ந்த 26 வயதாகும் இவர், தான் விளையாடும் மைன்கிராஃப்ட் மற்றும் போகிமோன் ஆகிய விளையாட்டுகளை காணொளியாக பதிவு செய்து யூடியூபில் பகிர தொடங்கினார்.

16 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை யூடியூபில் பெற்றுள்ள இவரின் காணொளிகளை 10 பில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

டான் மிடில்டன் என்பதை தனது இயற்பெயராக கொண்ட இவர், கடந்த ஆண்டின் முதல் 10 பேர்களில் கூட இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், யூடியூப் மூலம் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில் கடந்தாண்டு முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இடம் பெற்ற நான்கு பேர் மட்டும்தான் இந்தாண்டுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இவ்வருடத்துக்கான பட்டியலில் ஒரேயொரு பெண்தான் இடம்பிடித்துள்ளார். கனடாவை சேர்ந்த லில்லி சிங் என்பவர் சுமார் 66 கோடி வருமானத்துடன் பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளார்.

டேனியல் மிடில்டன் - 105.67 கோடி

ஈவன் பாங் - 99.37 கோடி

டூட் பெர்பெக்ட் - 89.76 கோடி

மார்கிப்லீர் - 80.14 கோடி

லோகன் பால் - 80.14 கோடி

பியூடைபை - 76.93 கோடி

ஜாக் பால் - 73.65 கோடி

யான் டாய்ஸ்ரிவியூ - 70.52 கோடி

ஸ்மோஸ் - 70.52 கோடி

லில்லி சிங் - 67.24 கோடி

- BBC - Tamil

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்