செவ்வாய் கிரகம் போல் தோன்றும் உலகின் இளம் தீவு

Report Print Fathima Fathima in சிறப்பு

தென் பசிபிக்கில் உலகின் புத்தம் புதிய ஹீங்கா டோங்கா- ஹீங்கா ஹா அபை தீவு உருவாகியுள்ளது.

இதுவே செவ்வாயின் நிலப்பரப்பிற்கு ஒத்த நிலப்பரப்பை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள்.

500 மீட்டர் நீளம் 250 மீட்டர் உயரமும் கொண்ட இத்தீவு, டோங்காவில் கடலடி எரிமலை சீற்றத்தால் தென் பசிபிக்கில் உருவானது.

சில மாதங்களில் தீவு அரித்துப் போகும் என விஞ்ஞானிகள் எண்ணிய நிலையில் அப்படி எதும் நடக்கவில்லை.

எனினும் தீவு சேதமடைய 30 ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் தற்போது எண்ணுகிறார்கள்.

இதுபோன்ற அமைப்புகள் செவ்வாயில் இருப்பதாக அவர்கள் நினைப்பதால் இது ஒரு பெரிய செய்தியாக கருதப்படுகின்றது.

செவ்வாய் கிரகம் பற்றிய ரகசியங்கள் சிலவற்றை வெளிக்கொண்டுவர இந்த தீவு உதவக்கூடும்.

- BBC - Tamil

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்