மீன்பிடிக்கு சென்ற பழங்காலப் பெண்கள்: ஆதாரத்தை வெளிக்கொணர்ந்த சவக்கிடங்கு

Report Print Givitharan Givitharan in சிறப்பு

பழங்காலப் பெண்களும் மீன்பிடிக்கு சென்றனர் என்பதை வெளிக்காட்டக்கூடிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 12,000 வருடங்கள் பழமை வாய்ந்த குறித்த சவக்கிடங்கானது இந்தோனிசிய பிராந்தியத்தைச் சேர்ந்த கடற் தொழிலாளர்களுடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இக் கிடங்கில் மீன்பிடிக்கு பயன்படும் ஹுக் வடிவங்களும், சில மனித எலும்பு படிமங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெண்களின் கன்னம் மற்றும் தாடை அமைப்புடைய மண்டையோடும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டே பெண்களும் மீன்பிடிக்கு சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இச் சவக்கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழமைக்கு மாறான வடிவம் உடைய தூண்டில் முனையும் (ஹுக்) இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது நன்றாக வளைந்துள்ள நிலையில் மிகவும் பளபளப்பான மேற்பரப்பினையும் கொண்டுள்ளது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்