நிலவில் இறங்கியதாக அமெரிக்கா கூறும் அப்பல்லோ 11 குறித்த உண்மைகள்

Report Print Kabilan in சிறப்பு

இன்று வரையிலும் பல இணையதளங்கள், சமூக தளங்களில் அப்பல்லோ-11 நிலவில் தரையிறங்கியது குறித்து நடக்கும் விவாதங்களில் பல தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன.

அப்பல்லோ-11 என்பது நிலாவில் மனிதரை இறக்கிய முதல் இயந்திரமாக கருதப்படுகிறது. அப்பல்லோ-11 ஜூலை 16, 1969யில் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.

ஜூலை 24, 1969யில் இது பூமிக்கு திரும்பியது. இது உண்மையா அல்லது பொய்யா ? என பெரும் விவாத பொருளாக திகழ்ந்து வருகிறது.

இந்த பயணத்தின் தலைமை அதிகாரியாக நீல் ஆம்ஸ்ட்ராங் நியமிக்கப்பட்டிருந்தார். அவருடன், மைக்கேல் கொலின்சும், விமானியாக எட்வின் ஆல்ட்ரினும் சென்றிருந்தனர்.

சிலர், அவர்கள் நிலவிற்கு சென்றது உண்மைதான் என்றும், ஆனால் தரையிறக்க முடியாததால் திரும்பி வந்துவிட்டனர் என்றும் கூறுகின்றனர். மேலும், அவர்கள் சென்ற காணொளிப்பதிவு அமெரிக்காவின் ஸ்டூடியோ ஒன்றில் காட்சியாக்கப்பட்டது தான் என்றும் கூறுகின்றனர்.

இவ்வாறான பல தகவல்கள் அப்பல்லோ-11 மிஷன் குறித்து பரவி வருகிறது. மேலும், அதைப் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகளும் உள்ளன.

1961ஆம் ஆண்டு மே 25யில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எப் கென்னடி தான், நிலவில் மனிதரை இறக்கும் திட்டத்தினைக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், நீல் ஆம்ஸ்ட்ராங் தனது குழுவுடன் நிலவுக்கு செல்லும் காணொளியை அப்போது ஐம்பது கோடி பேர் டிவியில் கண்டதாகவும் கூறப்படுகிறது.

நிலவில் குறிக்கப்பட்ட இலக்கில் பள்ளம் இருந்ததால், அப்பல்லோ-11ஐ தரையிறக்க முடியாமல் போனது. எனவே, நீல் ஆம்ஸ்ட்ராங்கின் உத்தரவின்படி, இலக்கிற்கு ஒரு மைல் தொலைவில் அப்பல்லோ-11 தரையிறக்கப்பட்டது.

நிலவில் இறங்கியதும் விண்வெளி வீரர்கள் பேசிய முதல் வார்த்தை ’அல்ட்ரின் காண்டாகட் லைட்’ என கூறப்படுகிறது. ஆனால், நாசா அதிகாரபூர்வமாக கூறியுள்ள அறிக்கையில், ‘Thats One Small for Man, One Giant for Mankind' என்ற வாக்கியத்தை தான் ஆம்ஸ்ட்ராங் முதலில் கூறினார் என தெரிவித்துள்ளது.

நிலவில் பறக்கவிட்ட அமெரிக்க கொடியின் பாகங்கள் ஹூஸ்டன், டெக்சாஸ் போன்ற பல்வேறு இடங்களில் வாங்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், அவையாவும் Sears எனும் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டதாக அறியப்பட்டது.

அல்ட்ரின் மற்றும் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கும் வியப்பில், தெரியாமல் சர்கியூட் சுவிட்சை உடைத்து விட்டதாகவும், அது எலக்ட்ரிக் என்பதால் வெறும் விரல்களால் தொட தயங்கிய விண்வெளி வீரர்கள், தாங்கள் வைத்திருந்த டிப்பிடு பேனா மூலமாக ஆன் செய்ததாக கூறியுள்ளனர்.

நிலவில், வீரர்கள் அமெரிக்க கொடியுடன் சேர்த்து, ஆலிவ் இலை வடிவிலான தங்கம், 73 உலக தலைவர்கள் மற்றும் அதன் முந்தைய அப்பல்லோ மிஷனில் பணியாற்றி பயிற்சியின் போது இறந்த மூன்று வீரர்கள் கூறிய செய்திகள் மற்றும் சில பொருட்களையும் விட்டு வந்துள்ளனர்.

நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய பிறகு அவர்களுடன் தொடர்பு கொண்டு வந்த கணினியின் செயல்திறன், இப்போது நாம் பயன்படுத்தும் கைப்பேசியின் செயல்திறனை விடவும் குறைவு என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விண்வெளிக்கு சென்ற வீரர்களுக்கு பயனடையும் வகையிலான காப்பீடு எதையும் அளிக்க எந்த நிறுவனமும் முன் வரவில்லையாம்.

அதனால், வீரர்கள் தங்கள் கையொப்பமிட்ட நூற்றுக்கணக்கான கடித உறைகளை, தங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் கொடுத்து அதன் மூலமாக லாபமீட்ட கூறியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பிரபஞ்சத்தில் தான் காற்று இல்லையே, பின்பு எப்படி அமெரிக்க கொடி மட்டும் நன்கு பறக்கிறது?, நிலவில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களில் ஏன் ஒரு நட்சத்திரம் கூட தெரியவில்லை?

என்ற கேள்விகளுடன், நிலவிற்கு சென்ற நிகழ்வே பொய் என்றும் சமூக வலைதளங்களில் பலர் கூறிவருகின்றனர்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்