அகத்தியரின் மர்மம் நிறைந்த பொக்கிஷ மலை

Report Print Kavitha in சிறப்பு

தமிழ் மொழியின் முச்சங்க வரலாற்றில் தலைச் சங்க புலவர்களின் அகத்தியரும் ஒருவராவர். இவர் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை முதன்முதலில் உலகிற்கு தந்தவர்.

அகத்தியர் மருத்துவத்தில் முதன்மையாக திகழ்ந்தவர் மற்றும் உயிர்கொல்லும் பல நோய்களுக்கு கூட மருந்து கண்டுபிடித்து ஓலைச்சுவடிகளில் வைத்திருந்தார் என்று கூறப்படுகின்றது.

அகத்தியர் வடக்கு மலையில் வாழ்க்கை நடத்தி வந்தவர் பின் தெற்கு நோக்கியுள்ள பொதிகை மலையை இவரது நிரந்தர இருப்பிடமாக மாறிவிட்டது.

இந்த மலை கேரள மாநிலத்தில் ஒரு பகுதியாகவும், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது.

இந்த மலையில்தான் தனது பெரும்பான்மையான காலத்தை அகத்தியர் கழித்தார் என்பதால், இம்மலை அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த அகத்தியர் மலையில் எண்ணற்ற மர்மங்களுக்கு விடைதெரியாமல் மறைந்துள்ளது.

இந்த மலைகளில் அதிகம் புலிகள் காணப்பட்டதால் புலிகளின் பொற்காடு என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தமலையில் அகத்தியருக்கு என்றும் கோயில் கட்டி பூஜை செய்து வருவது வழக்கமாயிற்று.

இராமயணத்தில் வரும் சஞ்சீவினி மலை என்று பலரும் அந்த அகத்தியர் மலையினை கூறுகின்றார்கள்.

ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் மட்டும் இந்த மர்மங்கள் நிறைந்த அடர்ந்த காட்டுக்கு செல்வதற்கு வனத்துறையினால் அனுமதி அளிக்கப்படுமாம்.

இந்த மலையிலே நீண்டநாள் வாழும் அரிய வகை மரங்கள், ஆயுள் நீட்டிக்கும் மூலிகைகள் எல்லாம் கிடைக்கின்றன மற்றும் உயிரை எடுக்கும் கொடுமையான விசமுள்ள 2000க்கும் மேற்பட்ட உயிரினங்களும் இந்த மலையில் உள்ளன.

இந்த மலையில் மிகவும் அடர்த்தியான மரங்கள் அதிகம் காணப்படுவதனால் பகல் நேரங்களில் கூட இருளாக தோற்றமளிக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்த மலையின் 6200 அடி உயரத்துக்கு மேல் தான் அகத்தியர் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சன்னதியை ஒன்று உள்ளது.

இந்த மலையில் பல அரியவகை மூலிகை காணப்படுகின்றது மற்றும் உயிர்கொல்லும் பல நோய்களுக்கு கூட மருந்து இங்கு என்று கூறப்படுகின்றது.

1500க்கும் மேற்பட்ட மூலிகைத் தாவரங்களோடு, இங்கு மட்டுமே கிடைக்கின்ற மூலிகை வகைகள் நூற்றைம்பதாகும்

யுனெஸ்கோ-வால் அறிவிக்கப்பட்ட உலகின் தலைசிறந்த உயிர்க்கோளக் காப்பகமான அகத்தியர் மலை காணப்படுகின்றது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers