இது தெய்வீக காதல்! ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டும் டும் டும்

Report Print Kabilan in சிறப்பு
363Shares

ஒடிசாவில் அமில வீச்சினால் பார்வை மற்றும் முகச்சிதைவுக்கு உள்ளான பெண்ணை அவரது காதலன் திருமணம் செய்ய இருக்கிறார்.

பிரமோதினி ராவுல் என்ற பெண்ணுக்கு 15 வயதாக இருக்கும் போது, ராணுவ வீரர் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு ராவுல் மறுப்பு தெரிவிக்கவே, இருசக்கர வாகனத்தில் ராணுவ வீரர் சென்றவாறே ராவிலின் முகத்தில் அமிலத்தினை வீசியுள்ளார்.

இதனால் ராவுலின் முகம் முழுவதும் சிதைவுக்கு உள்ளானதோடு, கண் பார்வையும் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு, ராவுல் முகச்சிதைவுக்காக ஐந்து அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் வீட்டில் படுக்கையிலேயே ஓய்வு எடுத்து வந்துள்ளார்.

அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்ட சமயத்தில், அவரை கவனித்துக் கொண்ட செவிலியரின் நண்பர் சரோஜ் குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

ராவுலின் தாயாருக்கு சரோஜ் பல உதவிகளை செய்து வந்தார், இதனால் நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியது.

பின்னர், டெல்லியில் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது திருமண பந்தத்தில் இணையப் போகிறார்கள்.

ராவுலை உடனிருந்து பார்த்துக் கொள்வதற்காக சரோஜ் தனது வேலையையே விட்டுவிட்டார்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்