மகாபாரத வில்லனுக்கு கோயில் கட்டி வழிபடும் அதிசய கிராமம்!

Report Print Kavitha in சிறப்பு
49Shares

துரியோதனன் மகாபாரதம் கதையின் முக்கியமான பாத்திரமாவான். இவன் கௌரவர்களில் மூத்த சகோதரனாவான்.

மகாபாரத இதிகாசத்தில் துரியோதனன் குருச்சேத்திரப் போரின் 18வது நாள் இறுதிப் போரில், துரியோதனன், கதாயுதப் போர் புரிந்து வீமனால் கொல்லப்படுகிறார்.

உத்தர்காஷியின் சவுர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கோயில் ஒன்றில் இந்துக்களின் புராதன காப்பியமான மஹாபாரதத்தில் வரும் பாத்திரமான துரியோதனுக்காக கோயில் ஒன்று அர்பணிக்கப்பட்டுள்ளது.

இது தென்னிந்தியாவில் துரியோதன‌னுக்கு இருக்கும் ஒரே கோவில் கேரளாவில், கொல்லம் அருகில் பொருவழி பெருவிருத்தி மலநாட‌ என்ற கோவில் இது ஒரு சிறிய குன்றின்மீது இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கின்றது.

இந்தியாவின் தனித்துவமான கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்

இந்த கோயிலின் கட்டுமான அமைப்பு அந்த மாநிலத்தின் சிறப்பு கட்டுமான வடிவத்தை ஒத்திருக்கிறது.

இக் கோயில் என்னவோ துரியோதனுக்குத்தான் கட்டப்பட்டது இருப்பினும் இங்கு சிவனுக்குத்தான் வழிபாடு நடத்தப்படுகிறது.

இந்தக் கோவிலில் சிறப்பு என்னவொன்றால் கோபுரம் கிடையாது அதிலும் கோயிலுக்கான எல்லா அம்சங்களையும் கொண்ட இந்த இடத்தில் ஏன் கோபுரம் வைக்கப்படவில்லை என்பது குறித்து இதுவரை யாரும் அறிந்திராத விடை தெரியாத மர்மங்களில் ஒன்றாகும்.

இந்தக் கோவிலின் பின்னே ஒரு கதை கூறப்படுகின்றது பாண்டவர்களைத் தேடி துரியோதனன் இங்கு வந்தபோது மிகவும் களைப்புற்று, ஒரு குருக்கள் வீட்டிற்குத் தண்ணீர் கேட்டுச் சென்றிருக்கிறான். தாகம் தணிந்த பிறகு, இந்த ஊருக்குகாக நிறைய நிலங்களை கொடுத்து உதவியிருக்கிறான். மேலும், இந்தக் கோவில் இருக்கும் குன்றின் மீது ஊருக்காக தியானம் செய்ததாக ஐதீகம் இருக்கிறது. இதன் காரணமாக துரியோதனனிற்கு இங்கு உரிய மரியாதை அளிக்கிறார்கள்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்