டொல்பின்களின் மொழியை அறிந்து தொடர்பாடும் திமிங்கிலம்: ஆச்சரியமூட்டும் தகவல்

Report Print Givitharan Givitharan in சிறப்பு

விலங்கினங்கள் அனைத்தும் தம்முள் தொடர்பாடலை மேற்கொள்வதற்காக விசேட தொடர்பாடல் மொழியினை கொண்டுள்ளன.

அதேபோன்று டொல்பின்களுக்கும் விசேட மொழி தொடர்பாடல் காணப்படுகின்றது.

ஆனால் இவற்றின் மொழியினை இரண்டே மாதத்தில் கற்றுக்கொண்டு அவற்றுடன் தொடர்பாடலை மேற்கொள்ளும் திமிங்கிலம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

நான்கே வயதான Beluga வகையைச் சேர்ந்த வெள்ளை திமிங்கிலம் ஒன்று டொல்பின்களுடன் இணைத்து விடப்பட்டுள்ளது.

அதன் ஒவ்வாரு அசைவுகளும் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் இரண்டு மாதங்களின் பின்னர் டொல்பின்களுடன் சகஜமாகப் பழகுவதை ஆராய்ச்சியாளர்கள் அவதானித்துள்ளனர்.

இதற்கான காரணத்தை அறிந்தபோது குறித்த திமிங்கிலம் டொல்பின்களின் மொழியினை கற்றுக்கொண்டமை தெளிவாகியுள்ளது.

இதன்போது டொல்பின்கள் போன்று தொடர்பாடலை மேற்கொண்ட திமிங்கிலத்தின் ஒலியை சுமார் 90 மணித்தியாலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்