அட அழகுக்காக இப்படியெல்லாம் செய்வார்கள்? ஆச்சரியமூட்டும் தகவல்கள்

Report Print Kavitha in சிறப்பு
146Shares
146Shares
ibctamil.com

பண்டைய காலம் தொட்டே பெண்கள் அழகுக்காக மெனக்கெட்டு இருக்கின்றனர், அப்போதே தன் சரும நிறத்தை வெள்ளையாக மாற்ற வேண்டி பல செயல்களை செய்துள்ளார்கள்.

மேலை நாட்டு பெண்கள் ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன் வைன் கலந்து முகத்தில் பூசுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.

1700ம் ஆண்டுகளில் அழகுக்காக Ceruse என்ற பொருளை பயன்படுத்தினர், இது கார்பனேட் மற்றும் ஹைட்ராக்ஸைட் கலந்த கெமிக்கல் கலவையாகும்.

இதனால் சருமத்துக்கு ஆபத்து என்று தெரிந்தும் பலரும் பயன்படுத்தி வந்தனராம், குறிப்பாக முகத்தில் மச்சங்கள் ஏதும் தோன்றினால் அழகாக காட்டும் வகையில் விதவிதமான ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர்.

அழகுக்காக முத்துப் பவுடரை பயன்படுத்தியிருக்கிறார்கள். இவை மிகவும் விலையுயர்ந்ததாகும்.

அதோடு முகத்தில் இருக்கும் தழும்புகளை மறைக்கவும் அரிசி மாவும், ஜிங்க் ஆக்ஸைடு போன்றவற்றை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கண்கள் அழகாக தெரிவதற்காக எலுமிச்சை சாற்றினால் ஆன ஐ ட்ராப்ஸை பயன்படுத்தி உள்ளனர், இதேபோல் இமைகளை அழகாக்க விளக்கெண்ணெயும் பயன்படுத்தியுள்ளனர்.

பற்களின் பாதுகாப்புக்கு முதலில் மாதுளம் பழத்தை பயன்படுத்தி பற்களில் இருக்கும் எனாமலை மறைக்கிறார்கள். பின்னர் ஜப்பானில் அதிகம் வளரும் சுமாக் மரக்கூழை குழைத்து பற்களில் பூசிக்கொள்கிறார்கள்.

ஆரம்ப காலங்களில் எண்ணற்ற விலங்குகளின் பொருட்கள் அழகுக்காக பயன்படுத்தப்பட்டது, குறிப்பாக சருமத்திற்கு கிரேக்க மற்றும் ரோமானியர்கள் மத்தியில் தங்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த முதலையின் கழிவை பயன்படுத்தியிருக்கிறார்கள். முதலையின் கழிவில் குளிப்பதற்க்கென்றே ப்ரத்யோக பாத் டப்பும் இருந்திருக்கிறது.

மண்புழு முட்டையினை மாத்திரைகளாக உட்கொண்டிருக்கிறார்கள். அவை வயிற்றில் நிறைவைத் தருமாம்.

அதனால் அதிகப்படியான கலோரி உணவினை நம்மால் சாப்பிட முடியாதாம். இது வயிற்றுக்குள் வளரவும் செய்யும் பின்னர் உடலிருந்து நீக்க அவர்கள் மிகவும் சிரமபட்டு இருப்பார்களாம்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்