உலகமே போற்றும் விஞ்ஞானியான இந்த சாதனை தமிழர் பற்றி தெரியுமா?

Report Print Raju Raju in சிறப்பு

மயில்சாமி அண்ணாதுரை - இஸ்ரோவின் தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார்.

கடந்த மாதம் இஸ்ரோ 104 செயற்கை கோள்களை விண்வெளிதளமான ஸ்ரீஹரிக்கோட்டாவில் தொடங்கியது.

கடந்த 2008ல் சந்திரனுக்கு சந்திராயான் 1 ராக்கெட் அனுப்பப்பட்டது. பின்னர் 2013ல் செவ்வாய்க்கு மங்கல்யான் அனுப்பப்பட்டது.

இந்த மூன்றும் விண்வெளி துறையில் மிக பெரிய சாதனையாக கருதப்படும் வேளையில் இம்மூன்றின் வெற்றியிலும் முக்கிய பங்காற்றியவர் தான் மயில்சாமி அண்ணாதுரை.

இன்று உலகம் போற்றும் விஞ்ஞானியாக விளங்கும் 58 வயதான மயில்சாமி அண்ணாதுரை இந்த இடத்துக்கு சாதரணமாக வந்து விடவில்லை.

அண்ணாதுரை கோயம்பத்தூரில் உள்ள கோத்தவடி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். இவர் தந்தை மாதம் 120 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் ஆசிரியராக இருந்தார்.

அண்ணாதுரையுடன் சேர்த்து அவர் தந்தைக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். இவர் தான் அதில் மூத்தவர்.

ஆசிரியர் பணியில் வரும் சம்பளம் பத்தாததால் அண்ணாதுரையின் தந்தை துணி தைக்கும் தொழில் இடையில் செய்து வந்தார். அதில் மாதம் 100 ரூபாய் வருமானம் வந்தது.

பள்ளிக்கூடம் முடிந்து வரும் வீட்டுக்கு வரும் அண்ணாதுரை தந்தையின் தையல் தொழிலுக்கு உதவிகளையும் செய்து வந்தார்.

இந்த ஏழ்மையிலும், அண்ணாதுரை படிப்பில் கெட்டிகாரராக விளங்கினார். எல்லா வகுப்பிலும் முதல் மாணவனாக வந்த அவர் பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாய் தேர்ச்சி பெற்றார்.

பின்னர் PUC படிப்பிலும் கல்லூரியிலேயே முதல் மாணவராய் வந்தார். பின்னர் அரசு கல்லூரியில் பி.இயும், PhD படிப்பை அண்ணா பல்கலைகழகத்திலும் அவர் முடித்தார்.

பின்னர் தனக்கு விருப்பமான விண்வெளி துறையை தேர்ந்தெடுத்து உலகம் போற்றும் விஞ்ஞானியாக இன்று திகழ்கிறார்.

அண்ணாதுரை பகவத்கீதையில் சொல்லப்பட்ட ஒரு வாக்கியத்தை தான் வேதவாக்காக பின்பற்றுகிறார்.

உங்கள் கடமையை தொடர்ந்து செய்யுங்கள், வெகுமதி தானாக வரும்!

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments