வவுனியா எழுத்தாளருக்கு கம்போடிய அரசின் நந்திவர்மன் விருது

Report Print Theesan in சிறப்பு

எழுத்தாளர் தமிழ்மணி மேழிக்குமரன் உலகத் தமிழ்க் கவிஞர் மாநாட்டில் கம்போடிய அரசின் நந்திவர்மன் விருது பெற்றுள்ளார்.

அந்தவகையில், வவுனியா தமிழ் சங்கத்தால் நேற்று இவருக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் தமிழருவி த.சிவகுமாரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, வவுனியா மாவட்ட தமிழ் சங்க தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், நகரசபை உபதவிசாளர் சு.குமாரசாமி, வவுனியா நகரச சபை உறுப்பினர் இராஜலிங்கம, சிரேஸ்ட விரிவுரையாளர் ந.பார்த்தீபன், ஓய்வுபெற்ற வவுனியா கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சிதம்பரநாதன், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை தமிழ் ஆசிரிய ஆலோகர் உதயகுமார், எப்.எம்.இ ஊடகக் கல்லூரி நிறுவுனர் இ.இராஜேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான மேழிக்குமரனுக்கு தமிழ் சங்கத்தால் நினைவு பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்