113 ஆண்டுகளுக்கு முன் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்! 5500 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கம்?,,

Report Print Murali Murali in சிறப்பு

113 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய நாட்டிற்கு சொந்தமான போர் கப்பலில் பல ஆயிரம் கோடி பெறுமதியான தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கப்பல் தென்கொரியா அருகே உள்ள உல்லெங்டோவ் தீவுக்கு அருகே மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1905ம் ஆண்டு ரஷ்யா மற்றும் ஜப்பானுக்கு இடையே நடைபெற்ற போரின் போது ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான திமித்ரி டான்ஸ்கோய் என்ற இந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி எந்த உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் இல்லை. ரஷ்யா தரப்பிலும் விளக்கம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடலில் மூழ்கிய ரஷ்ய கப்பலை தேடும் பணிகளில் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, ஷினில் குரூப் என்ற நிறுவனம் இதற்காக தென்கொரியா, சீனா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை பணிக்கு அமர்த்தி, குறித்த கப்பலை தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தேடுதலின் பலனாக, தென்கொரியாவின் உலெங்டோவ் தீவை ஒட்டிய கடல்பரப்பில் சுமார் 430 மீட்டர் ஆழத்தில், திமித்ரி டான்ஸ்கோய் கப்பல் மூழ்கியிருப்பது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers