இலங்கையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்! சொர்க்கலோகம் என வியந்த மக்கள்

Report Print Vethu Vethu in சிறப்பு
3711Shares
3711Shares
ibctamil.com

அண்மைக்காலமாக இலங்கையில் மாறுபட்ட காலநிலை நிலவி வருகிறது.

காலை மற்றும் இரவு நேரங்களில் அதிக குளிரான காலநிலையும், ஏனைய நேரங்களில் அதிக வறட்சியான காலநிலையும் நிலவி வருகிறது.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் வழமைக்கு மாறாக கடும் குளிரான காலநிலை நிலவுகிறது.

காலை வேளையில் உறைபனி கொட்டுவதால் நுவரெலியா நகரம் அழகாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் இன்றையதினம் நுவரெலியா வான்பரப்பில் வியப்பை ஏற்படுத்தும் வகையிலான காட்சிகள் தென்பட்டுள்ளன.

வானம் நிறைந்த முகில்கூட்டங்கள் பனிப்பறைகளாக காட்சியளித்துள்ளன. இது அங்குள்ள மக்களை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தரையெங்கும் உறைபனி, வான்பரப்பில் முகில் கூட்டங்கள் பறைப்பாறைகாக காட்சி, இதுவொரு சொர்க்கலோகம் போன்று காட்சியளித்தாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்