ஒட்டுமொத்த இலங்கையர்களையும் வியப்பில் ஆழ்த்திய அதிசய பெண்!

Report Print Vethu Vethu in சிறப்பு
2238Shares
2238Shares
ibctamil.com

மூளையில் ஏற்பட்டுள்ள புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்ணொருவரின் பிந்திய செயற்பாடுகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

புற்றுநோயில் இருந்து முற்றாக குணமடைந்துள்ள இலங்கை பெண் ஒருவர், கழிவு பொருட்களை பயன்படுத்தி வாழ்க்கையை வெற்றிகரகமான முன்னெடுத்து செல்வதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிடடுள்ளது.

குண்டசாலை வராபிட்டிய பகுதியை சேர்ந்த ஜுட் ஹேவாகே வன்னிய என்ற பெண் தொடர்பிலேயே செய்தி வெளியாகியுள்ளது.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையின் தாயான ஜுட், மூளையில் மூன்றாவது சத்திரகிசிச்சைக்கு முகங்கொடுக்க நேரிட்டது. எனினும் சத்திரசிகிச்சையை மேற்கொள்ள மறுத்த ஜுட், மரணத்தை எதிர்கொள்ள தயாரானார்.

2014ஆம் ஆண்டு மஹரகம வைத்தியசாலையில் இரு முறை சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னரே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

புற்றுநோயினால் உடலில் ஏற்பட்ட மாற்றத்துடன் மகளை பார்க்க விரும்பாதவர் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னரும் 7 மாதங்கள் கண்டி புற்றுநோய் பிரிவில் வாழ்ந்துள்ளார்.

“அந்த காலப்பகுதியில் தொலைவில் இருந்தே மகளை பார்த்தேன் என ஜுட் தெரிவித்துள்ளார்.”

2016ஆம் ஆண்டு வைத்தியசாலையில் இருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறிய ஜீட் மற்றுமொரு சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளார். அது வாழ்வதற்கான சிக்கலாகும்.

'நான் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு வரும் போது என்னால் ஒழுங்கான முறையில் நடக்க முடியாது. உதவியுடனே நடந்தேன். சற்று கண் தெரியாமலும் போனது. வீட்டருகில் இருந்தவர்களின் உதவி கிடைத்த போதிலும் தினமும் அவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என ஜீட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கழிவுப் பொருட்கள் தொடர்பில் ஜுட் திடீரென அவதானம் செலுத்தியுள்ளார்.

வர்த்தகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நிதி இல்லாத நிலையில் உறவினர்கள் வீடுகளில் கிடைத்த கழிவு பொருட்களான பிலாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன்களை வீட்டிற்கு கொண்டு வந்து அதன்மூலம் கைப்பணிகளை ஆரம்பிக்க ஜுட் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அவ்வாறு வடிவமைத்த பொருட்களை விற்பனை செய்வதற்கு ஆரம்பித்துள்ளார். அதற்கமைய அந்த பகுதியில் இடம்பெறும் நிகழ்வுகளின் போது அதனை விற்பனை செய்து வந்துள்ளார்.

மாநகர சபையில் கழிவு பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு ஜுட் முயற்சித்துள்ளார். அதற்கமைய கண்டி நகர சபை குப்பைகள் அனைத்து ஜுட்டின் நிர்மாணிப்புகளாகியது. அதில் நல்ல பலனை அனுபவித்த ஜுட் தனது திறமையை மேலும் பலருக்கு கற்பிப்பதற்கு ஆரம்பித்தார்.

தற்போது அவரது வாழ்க்கை ஒரு முன்னேற்றகரமான பாதையில் செல்வதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்