பேஸ்புக் மூலம் பழக்கமானவரை நம்பி காதலித்து திருமணம் செய்த அழகிய இளம்பெண்! சில மாதங்களில் வெளியான சுயரூபத்தால் அதிர்ச்சி

Report Print Raju Raju in தெற்காசியா
900Shares

இந்தியாவில் திருமணமான சில மாதங்களில் மனைவியின் நகைகள் மற்றும் பணத்தை திருடி கொண்டு கணவன் ஓடிய சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சுனிதா. இளம்பெண்ணான இவருக்கு அபிஷேக் ஆர்யா என்பவர் பேஸ்புக் மூலம் நட்பானார்.

பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினார். இதையடுத்து அபிஷேக் - சுனிதா திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின் வேலைக்கு செல்லாமல் இருந்த அபிஷேக் சுனிதாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து சண்டை போட்டார்.

அப்போது தான் அபிஷேக்கின் சுயரூபம் தெரியாமல் அவரை மணந்து கொண்டோமே என வேதனைப்பட்டிருக்கிறார் சுனிதா. பின்னர் சில மாதங்களில் வீட்டிலிருந்து மாயமானார் அபிஷேக்.

அப்போது வீட்டிலிருந்த ரூ 3 லட்சம் மதிப்பிலான நகைகள், ரூ 1 லட்சம் பணத்தை எல்லாம் திருடி கொண்டு ஓடியிருக்கிறார் என்பதை கண்டுபிடித்த சுனிதா அதிர்ச்சியடைந்தார்.

ஒரு வருடமாக அபிஷேக் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில் அவர் கொல்கத்தாவில் இருப்பதாக சமீபத்தில் சுனிதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொலிசாருடன் சேர்ந்து கொல்கத்தாவுக்கு சுனிதா சென்ற போது அங்கு அவருக்கு ஒரு குடும்பம் இருப்பது தெரியவந்தது.

மேலும் அங்கு அபிஷேக் இல்லை என தெரியவந்த நிலையில் அவரை பொலிசார் தொடர்ந்து தேடி வருகின்றனர், அவர் கிடைத்த பின்னர் மேலும் பல மோசடிகள் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்