இரத்த தானம் செய்பவருக்கு 1 கிலோ சிக்கன் மற்றும் பன்னீர் வழங்கப்படும்! ஆச்சரியத்தை கிளப்பிய சுவரொட்டி

Report Print Gokulan Gokulan in தெற்காசியா
48Shares

நீங்கள் எங்களுக்கு இரத்தம் தாருங்கள், நாங்கள் உங்களுக்கு 1 கிலோ பன்னீர் அல்லது கோழிக்கறி தருகிறோம்' எனக் கடந்த சில நாட்களாக மும்பை முழுவதும் காணப்படும் சுவரொட்டிகள் அதிர்சசியையம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த போஸ்டர்கள் ஒரு கார்ப்பரேட்டரும் ஆளும் சிவசேனா உறுப்பினருமான சமதன் சதா சர்வங்கர் ஏற்பாடு செய்துள்ள ரத்த தான இயக்கத்திற்கானவை.

மும்பை நகரம் முழுவதும் உள்ள இரத்த வங்கிகள், பொதுவான வகை இரத்தம் உட்பட கிட்டத்தட்ட எல்லா வகைகளிலும் குறைவாக இயங்குவதாகவும், குறைவான மக்களே வந்து இரத்த தானம் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறுகின்றன.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு முந்தைய ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இரத்த தானம் செய்துவந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை சுமார் ஒரு டஜன் வரை குறைந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடும் என்ற பயத்தால் மக்கள் இரத்த தானம் செய்வதிலிருந்து ஒதுங்குவததாககே கூறப்படுகிறது..

மிகவும் பொதுவான இரத்த வகையான O+ மற்றும் B+ உள்ளிட்ட இரத்தங்கள் குறைப்பாட்டில் இருப்பதால் புற்றுநோயால் அல்லது தலசீமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது விபத்துக்களில் சிக்கியவர்கள் மற்றும் அவசரகால தேவைகள் போன்ற வழக்கமான இரத்தமாற்றம் தேவைப்படும் நோயாளிகளுக்கு இது அப்பத்தாகக்கூடும்.

இதுகுறித்து பேசிய சமதன் சதா சர்வங்கர், 'நகரத்திற்கு இரத்தம் தேவைப்படுகிறது. இது மக்களை தானம் செய்ய வற்புறுத்துவதற்கான ஒரு முயற்சி" என்றும் தனது பிரச்சாரம் மக்களை இரத்த தானம் அளித்து மற்ற மக்களின் உயிரைக் காப்பாற்ற உதவும் என்று நம்புவதாகக் கூறுகிறார்.

டிசம்பர் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மும்பையின் புதிய பிரபாதேவி சாலையில் உள்ள ராஜ்பாவ் சால்வி மைதானத்தில் இந்த இரத்த தான முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்