மனைவி பக்கத்து வீட்டுக்காரருடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட கணவன் செய்த செயல்! இந்தியாவில் பயங்கரம்

Report Print Balamanuvelan in தெற்காசியா
13670Shares

தன் மனைவி பக்கத்து வீட்டுக்காரருடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட கணவன், மனைவியின் தலையை கோடரியால் வெட்டி எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த Kinnar Yadav (40)க்கு, நீண்ட நாட்களாகவே தன் மனைவி Vimla (35) தனக்கு துரோகம் செய்துவருவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அது போதாதென்று, அக்கம் பக்கத்தவர்கள் Vimlaவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் Ravikant Yadav என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக Kinnarஇடம் கூறியுள்ளார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வாக்கிங் சென்று திரும்பும்போது தன் மனைவியும் Rakivantம் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட Kinnarக்கு கடுமையான ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

Image: DNA India

அருகிலிருந்த கோடரியை எடுத்து அவர் Rakivantஐத் தாக்க, அவர் காயத்துடன் தப்பியோடியுள்ளார்.

Kinnarஇன் கோபம் மனைவி மீது திரும்ப, அவரது தலையை வெட்டியுள்ளார் அவர். வெட்டிய தலையுடன் 3 கிலோமீற்றர் நடந்தே பொலிஸ் நிலையம் சென்ற Kinnarஐக் கண்ட பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

அவர்களிடம், தான் Ravikantஐத்தான் கொல்ல நினைத்ததாகவும், ஆத்திரத்தில் மனைவியைக் கொன்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் Kinnar. Kinnarஐக் கைது செய்துள்ள பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளார்கள்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்