திருமணமான முதல் நாளில் இருந்தே அந்த கொடுமை நடந்து வந்தது! கழுத்தில் தாலி ஏறிய 5 மாதத்தில் கொல்லப்பட்ட புதுப்பெண்

Report Print Raju Raju in தெற்காசியா
3119Shares

இந்தியாவில் திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண்ணை அவரின் கணவர் மற்றும் குடும்பத்தார் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அனில் துயாகி. இவருக்கும் அஞ்சலி (25) என்ற பெண்ணுக்கும் ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது ரொக்கமாக பணத்தை அனிலுக்கு அஞ்சலி பெற்றோர் வரதட்சணை கொடுத்தனர்.

ஆனால் திருமணத்துக்கு பின்னர் ரூ 11 லட்சம் வரதட்சணை வேண்டும் என அஞ்சலியை அவரின் கணவர் அனில் மற்றும் மாமனார், மாமியார் கொடுமைப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மூவரும் சேர்ந்து அஞ்சலியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து அஞ்சலி சடலத்தை கைப்பற்றினார்கள்.

பொலிசில் அஞ்சலி சகோதரர் ராம்குமார் அளித்த புகாரில், என் சகோதரி திருமணமான நாள் முதல் கணவர் குடும்பத்தால் கொடுமைகளை அனுபவித்து வந்தார், அவரை வரதட்சணை கேட்டு தினமும் அடித்து துன்புறுத்தி வந்தனர்.

அஞ்சலியை கொலை செய்த மூவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள அனில் உள்ளிட்ட மூவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்